Running 10 Minutes a Day: நாம் பலரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவு முறை போன்றவற்றால் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இதனைத் தவிர்க்க, தினமும் உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் ஓடுதல், ஜாகிங், உடற்பயிற்சி, யோகா போன்றவை மிகுந்த நன்மை பயக்கும். அன்றாட வாழ்வில் உடற்பயிற்சிக்கென தனி நேரம் ஒதுக்க முடியாதவர்கள் பலர் உள்ளனர். எனினும், தினந்தோறும் 10 நிமிடம் ஓடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் 10 ஓடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தினந்தோறும் 10 நிமிடம் ஓடுவது உடலில் ஏற்படும் பல்வேறு வகையான பிரச்சனைகளைத் தீர்ப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Swimming Benefits: தினமும் நீச்சல் அடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
எலும்பு வலிமைக்கு
எடை தாங்கும் செயலாக, ஓடுவது அமைகிறது. இதில் கீல் உடல் மற்றும் முதுகெலும்பில் எலும்புகள் வலுவடைய ஆரம்பிக்கிறது. நாளடைவில் இவை வலுவாகி எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது. மேலும் ஒட்டு மொத்த எலும்பு ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது.
இதய பாதுகாப்பிற்கு
கார்டியோவாஸ்குலார் சரியாக இருக்க ஓட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. தினந்தோறும் 10 நிமிடம் ஓட்டம் மேற்கொள்வது இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.
கவனச்சிதறலைத் தவிர்க்க
தினமும் ஓடுவதன் மூலம் கவனத்தை மேம்படுத்தலாம். இது ஒரு செயலை அதிக செயல்பாட்டுடன் செயல்பட வைக்கிறது. நாம் செய்யும் வேலையில் அதிக கவனத்தை செலுத்த உதவுவதுடன், நேரத்தை திறம்பட பயன்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Stretching Exercise Benefits: ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
மனநிலை மேம்பாட்டிற்கு
உட்கார்ந்த வாழ்க்கை முறையால் பலரும் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம் ஆகும். இதிலிருந்து விடுபட சிறந்த தேர்வாக அமைவது தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதாகும். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்டோர்பின்கள் என்ற இரசாயனங்களை வெளியிடுகிறது. மன ஆரோக்கியத்திற்கு தினமும் 10 நிமிடங்கள் ஓட்டம் மேற்கொள்ளலாம்.
நீண்ட ஆயுள் மற்றும் நோய் தடுப்பு
ஒரு நாளைக்கு 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது வாழ்க்கையில் நீண்ட ஆயுள் மற்றும் பல்வேறு நோய் தடுப்பானாக அமைகிறது. அந்த வகையில் புற்றுநோய், அல்சைமர் போன்ற நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
தினந்தோறும் 10 நிமிடங்கள் ஓடுவது இவ்வாறு பல்வேறு வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே, தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் ஓடுவதை வழக்கமாக்கிக் கொண்டு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க
Image Source: Freepik