Expert

Stretching Exercise Benefits: ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

  • SHARE
  • FOLLOW
Stretching Exercise Benefits: ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?


Stretching Exercises Benefits: உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். அதிலும் உடல் தோரணையுடன் அழகாக இருப்பதற்கு பலரும் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் உடல் நல்ல அழகான தோரணையில் மாறுவதற்கு நீட்சி பயிற்சி சிறந்த தேர்வாக அமையலாம்.

இந்த நீட்சி பயிற்சி செய்வது உடலை நல்ல தோரணையுடன் வைப்பதுடன் அழகாக வைக்கவும் உதவுகிறது. உடல் நீட்சிப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து டெல்லியின் யோகா குரு தீபக் தன்வார் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நீட்சி பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

யோகா குரு தீபக் தன்வார் அவர்களின் கூற்றுப்படி, உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் நீட்சிப் பயிற்சி மிக முக்கியமாகும். நீட்சிப்பயிற்சி உடலின் ஒவ்வொரு பகுதியின் தோரணையை மேம்படுத்துவதுடன், உடலுக்கு நேர்மறை ஆற்றலை வழங்குகிறது.

உடல் நிலையை மேம்படுத்த

இன்றைய வாழ்க்கையில், பெரும்பாலானோர் அதிக நேரம் அதாவது 8 முதல் 10 மணி நேரம் வரை உட்கார்ந்த வேலையிலேயே ஈடுபடுகின்றனர். தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடல் தோரணையை சரியாக கையாள முடியாது. இதன் காரணமாக, பல நேரங்களில் சரியான உடல் தோரணை இல்லாதது இடுப்பு, மூட்டுகள், மற்றும் முழங்கால் போன்ற உறுப்புகளில் பிரச்சனையை உண்டாக்கலாம். ஆனால், இதை நீட்சிப் பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். நீட்சிப் பயிற்சி செய்வது உடலை நெகிழ்ச்சியாக வைக்கவும், தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Daily Exercise Benefits: இது தெரிஞ்சா இனி தினமும் எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க

உடல் வலி குறைய

உடலின் மூட்டுகள் மற்றும் தசைகளின் குறைவான இயக்கத்தினால் பல நேரங்களில் வலி உண்டாகும். இந்த வலியிலிருந்து நிவாரணம் பெற நீட்சி பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கலாம்.

மன அழுத்தம் குறைய

ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வதன் மூலம் போதுமான அளவு இரத்தம் மூளையை சென்றடைகிறது. மேலும் இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. யோகா குரு தீபக் தன்வார் அவர்களின் கூற்றுப்படி, சிறு விஷயங்களில் அடிக்கடி வருத்தப்படுபவர்களுக்கு இந்த நீட்டிக்கும் பயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக தசை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நீட்சிப் பயிற்சி சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே தினமும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஸ்ட்ரெச்சிங் பயிற்சி செய்து வருவது தசை பிரச்சனைக்குத் தீர்வு தருகிறது. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இவை அனைத்தும் நீட்சிப் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஆகும். இவ்வாறு நீட்சி பயிற்சி செய்வது உடலைத் தோரணையுடன் அழகாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flexible Body Benefits: உடல் இந்த தோரணையில் இருந்தா, உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லதாம்.

Image Source: Freepik

Read Next

Weight Loss Tips: அதிக கொழுப்பை விரட்டியடிக்க இந்த 5 உடற்பயிற்சிகள ட்ரை பண்ணுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்