Expert

Malasana During Periods: பீரியட்ஸ் டைம்ல மலாசனம் செய்வதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Malasana During Periods: பீரியட்ஸ் டைம்ல மலாசனம் செய்வதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

இதிலிருந்து விடுபட தினமும் யோகா பயிற்சி செய்து வாழ்க்கை முறையை மேம்படுத்தலாம். இதன் மூலம் ஹார்மோன் சமநிலை பிரச்சனையை குணப்படுத்தலாம். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு யோகா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் மாதவிடாய் காலத்தில் மலாசனா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து யோகாசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Acidity: அசிடிட்டியில் இருந்து விரைவில் விடுபட இந்த யோகா செய்யுங்க.

மாதவிடாய் காலத்தில் மலாசனா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • மாதவிடாய் காலத்தில் பெண்கள் செரிமான பிரச்சனைகளைச் சந்திப்பர். இதற்கு மலாசனா செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தோரணை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அஜீரணத்தைக் குறைக்க உதவுகிறது.
  • மாதவிடாயின் போது பெண்கள் கடுமையான வலியை அனுபவிப்பர். இதற்கு மலாசனா சிறந்த நன்மைகளைத் தரும். தினமும் இந்த யோகா செய்வதன் மூலம் வயிற்று வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • தினமும் மலாசனம் செய்வது சிறுநீர் மற்றும் மலத்தின் ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனுடன் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
  • பெண்களுக்குக் கருப்பையை சுத்தம் செய்ய மலாசனா பெரிதும் உதவுகிறது.
  • மலாசனா யோகா செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துகிறது. இதன் மூலம் மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளைச் சரி செய்கிறது.
  • மாதவிடாய் காலத்தில் இனந்த பயிற்சி செய்வது வயிறு வீக்கங்களைக் குறைக்கவும், வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் தருகிறது.
  • மாதவிடாய் காலத்தின் போது உடலின் கீழ்ப்பகுதியை அதாவது இடுப்புத் தளத்தைப் பலப்படுத்துகிறது.
  • மாதவிடாயின் போது பெண்கள் அடிக்கடி எரிச்சலை உணர்வர். இதற்கு மலாசனா செய்யலாம். இந்த பயிற்சி செய்வது மனதை அமைதிப்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் முதுகு வலி இருப்பதை பலரும் உணர்வர். இந்த சூழ்நிலையில் மலாசனா செய்வது இடுப்பு தசைகளை பலப்படுத்துவதுடன், முதுகுவலியைக் குறைக்க உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மலாசனா யோகாவைச் செய்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. மற்ற யோகாக்களைப் போல, சரியாக செய்ய வேண்டும். மேலும் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமாயின் மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? குறையுமா?

Image Source: Freepik

Read Next

World Kidney Day 2024: செயலிழந்த சிறுநீரகமும் சிறப்பாக செயல்பட இந்த யோகாசனங்களை செய்யுங்கள்!

Disclaimer