Japa Meditation Benefits: இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இவை உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் இவை உணர்த்தி ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க தியானம் சிறந்த தேர்வாக அமையும்.
ஏனெனில் தியானம் செய்வது உடல் மற்றும் மனதை ஒருங்கிணைத்து அது சார்ந்த பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இவை மனக்கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக அமையும். ஆனால், தியானங்களில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக ஜப தியானம் அல்லது மந்திர தியானம் சிறப்பு வாய்ந்த தியானம் ஆகும். இதில் ஜப தியானம் குறித்தும், அதை எப்படி செய்வதால் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பது குறித்தும் யோகா குரு தீபக் குமார் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Reduce Yoga: கைகளில் தொங்கும் கொழுப்பைக் கரைக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.
ஜப தியானம்
யோகா குருவின் கூற்றுப்படி, ஜப தியானம் அல்லது மந்திர தியானம் என்பது தியானத்தின் ஒரு வடிவம் ஆகும். இதில் மனதை அமைதிப்படுத்த மந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தியானத்தில் நாம் பலவகையான மந்திரங்கள், வார்த்தைகள் சொற்றொடர்களை உச்சரிப்பர். இந்த தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
ஜப தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
கவனத்தை அதிகரிக்க
ஜப தியானம் செய்யும் போது தொடர்ந்து மந்திரங்கள் உச்சரிக்கப்படுவது, மனதின் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. உண்மையில் ஒருவர் தியானம் செய்யும் போது அவர் நீண்ட நேரம் அமைதியாக இருப்பர். இவ்வாறு அமைதியாக இருக்கும் போது மனதின் பல உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு வேலையில் மனதை ஒருமுகப்படுத்துகிறது.
தூக்கத்தை மேம்படுத்த
இரவில் தூங்குவதில் பலரும் சிரமத்தை அடைகின்றனர். அதிலும் திடீரென எழுதல், தூக்கம் இல்லாமல் காணப்படுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தியானம் செய்வது மிகவும் நன்மை தரும். எனவே தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஜப தியானம் செய்வது உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுவதுடன், தூக்கத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga During Periods: மாதவிடாயின் போது யோகா செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
எதிர்மறை எண்ணங்களை நீக்க
ஜப தியானம் அல்லது மந்திர தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்துவதுடன், எதிர்மறை எண்ணங்களை அகற்றவும் உதவுகிறது. இந்த தியானத்தை தொடர்ந்து செய்து வருவது மனதை ஆறுதலாகவும், அமைதியாகவும் வைக்க உதவும். மேலும், நேர்மறையான எண்ணங்கள் தோன்றும்.
ஜப தியானம் செய்யும் முறை
ஜப அல்லது மந்திர தியானம் செய்ய நினைப்பவர்கள் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.
- முதலில் ஏதாவதொரு துணியின் மீது தியான நிலையில் அமர்ந்து கைகளை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்நிலையில் ஓம் போன்ற மந்திரங்களை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டும்.
- பின் கண்களை மூடிக் கொண்டு நினைத்த வார்த்தையை குறைந்தது 20 முதல் 30 முறை சொல்ல வேண்டும்.
- அதன் பிறகு கண்களைத் திறந்தும் மீண்டும் இதே போல செய்ய வேண்டும்.
- இந்த செயல்முறையை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.
தினந்தோறும் மந்திர தியானம் செய்வது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை நீக்கி நேர்மறை எண்ணங்களைத் தரும்.
இந்த பதிவும் உதவலாம்: Surya Mudra Benefits: இந்த சிம்பிள் முத்ரா செய்யுங்க. பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.!
Image Source: Freepik