Surya Mudra Benefits: இந்த சிம்பிள் முத்ரா செய்யுங்க. பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.!

  • SHARE
  • FOLLOW
Surya Mudra Benefits: இந்த சிம்பிள் முத்ரா செய்யுங்க. பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.!


What Are The Benefits Of Surya Mudra: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன அமைதி இரண்டும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் உடல், மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றன. இதனைத் தவிர்க்க அன்றாட வழக்கத்தின் முக்கிய அங்கமாக யோகாவை மேற்கொள்ளலாம். ஏனெனில் யோகா செய்வது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் என இரண்டிற்கும் நன்மை தருவதாக அமைகிறது.

இந்த காலகட்டத்தில் வேலைப்பளு, நேரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யோகா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஒருவருக்கு சிறிய இடைவேளை கிடைத்தால், அந்த நேரத்திலும் யோகாவை மேற்கொள்ளலாம். அந்த வகையில் சூரிய முத்திரை மிகவும் எளிமையானதாகவும், பல்வேறு நோய்களில் இருந்து காப்பதாகவும் அமைகிறது. இதில் சூரிய முத்திரை செய்யும் முறை மற்றும் அதன் பலன்கள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga During Periods: மாதவிடாயின் போது யோகா செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

சூரிய முத்திரா செய்யும் முறை

  • இந்த சூரிய முத்திரா செய்யும் போது முதல் தளர்வான நிலையில் அமைதியான இடத்தில் அமர வேண்டும்.
  • பின் முழங்கால்களில் கைகளை வைத்து சுகாசனத்தில் அமரவும்.
  • இந்த ஆசனம் செய்யும் போது தரையில் உட்காருவது சிறந்ததாகும்.
  • இந்த ஆசனத்தில் மோதிர விரலை தனது கட்டை விரலில் வைத்து மற்ற அனைத்து விரல்களையும் திறக்க வேண்டும்.
  • இந்த முத்ரா செய்வது வாத மற்றும் பித்த பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது.

சூரிய முத்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உடலின் அனைத்து கூறுகளையும் சமநிலைப்படுத்த சூரிய முத்ரா உதவுகிறது. இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இதில் சூரிய முத்ரா செய்யும் போது நமக்குக் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

உடல் வெப்பநிலையை சீராக்க

சூரிய நமஸ்காரத்துடன், சூரிய முத்ரா செய்வது உடல் வெப்பநிலையை நடுநிலையில் வைத்திருக்க உதவும். குறிப்பாக, குளிர்காலத்தில் நடுக்கம் பிரச்சனையை சமாளிக்க சூரிய முத்ரா மிகவும் பயனளிக்கும். குறைந்த அளவு வியர்வை வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள் சூரிய முத்ரா செய்வது நன்மையைத் தருகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த

சூரிய முத்ரா கணைய செயல்பாட்டில் பெரிதும் பங்களிக்கிறது. இந்த தோரணையை முறைப்படுத்துவதன் மூலம், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது. நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களில் உடல் பருமனும் ஆகும். சூரிய முத்ரா செய்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இவை உடலில் அதிகரித்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. எனினும், கடுமையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Yoga Asanas: இந்த குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

மன அழுத்தம் நீங்க

சூரிய முத்ரா உடல் தோரணையை சீராக வைத்து மூளை ஆற்றலை அதிகரிக்கிறது. இவை ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உருவாக்கும் செயல்திறனை துரிதப்படுத்துகின்றன. சூரிய முத்ரா மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    தைரய்டு பிரச்சனைக்கு

    உடலில் தைராய்டு சுரப்பியை சரியாக செயல்பட வைக்க சூரிய முத்ரா உதவுகிறது. இதன் மூலம் தைராய்டு சுரப்பியால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையைக் குறைக்கலாம். இருப்பினும் கடுமையான தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், முதலில் மருத்துவரை அணுக வேண்டும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் காலையில் சூரிய முத்ராவை தவறாமல் செய்து வருவது படிப்படியாக தைராய்டு பிரச்சனையிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது.

    சூரிய முத்ராவின் மற்ற நன்மைகள்

    • சூரிய முத்ரா செய்வது உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளை உருவாக்கும் செயல்திறனை மேம்படுத்தி நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.
    • மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது.
    • சூரிய முத்ரா காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
    • இந்த முத்ரா செய்வது உடல் வெப்பநிலைய சீராக வைத்துக் கொள்வதால், குளிர்காலத்தில் தொண்டை வலி, மூட்டு வலி மற்றும் சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கிறது.

    இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!

    Image Source: Freepik

    Read Next

    Arm Fat Reduce Yoga: கைகளில் தொங்கும் கொழுப்பைக் கரைக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.

    Disclaimer

    How we keep this article up to date:

    We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

    • Current Version