$
Benefits Of Doing Gyan Mudra: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திய மேம்படுத்துவதற்கு யோகா சிறந்த தேர்வாக அமைகிறது. இதில், யோகா மற்றும் முத்திரைகளின் உதவியுடன் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம். யோகா தோரணைகள் கைகளின் விரல்கள் மற்றும் கட்டை விரலால் செய்யப்படுகிறது. இந்த யோகா தோரணைகள் மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்கலாம். இதற்கு கியான் முத்ரா பெரிதும் உதவுகிறது.
ஏஎஸ்டி யோகா குடும்பத்தின் நிறுவனர் யோகாச்சார்யா தீபக் தன்வார் கருத்துப்படி, கியான் முத்ரா செய்வது மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றை நீக்குகிறது. இதில், கியான் முத்ரா செய்வதன் மூலம் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் மற்றும் இந்த முத்ராவை செய்வதற்கான சரியான முறை போன்றவற்றைக் குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
கியான் முத்ரா செய்வதன் நன்மைகள்
தினந்தோறும் கியான் முத்ரா செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
மன உறுதியை அதிகரிக்க
மனக்குழப்பம் உள்ளவர்கள் தினமும் கியான் முத்ரா செய்யலாம். இதனால், மனம் அமைதி அடைவதுடன், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியும். இந்த முத்ராவை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

மன அழுத்தம் மற்றும் கவலை நீங்க
இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு மற்றும் இன்னும் சில காரணங்களால் மக்கள் மன அழுத்தம் மற்றும் கவலைகள் உணர்கின்றனர். கவலையில் இருப்பது மூளையின் செயல்பாட்டை பாதிக்கலாம். இந்த சிக்கலைத் தவிர்க்க கியான் முத்ரா பயிற்சி செய்யலாம். மனக்கவலை, மன அழுத்தம் இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இதைத் தவிர்க்கவும் கியான் முத்ரா செய்யலாம்.
மேம்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்பு
கியான் முத்ராவின் மூலம், ஒரு நபரின் செரிமான அமைப்பு மேம்படுகிறது. இதன் மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் சிறப்பாக செயல்படும். இந்த முத்ரா மனிதனின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வெளிப்புற நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga And Meditation Benefits: தினமும் தியானம் செஞ்சா இந்த பலன்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
ஹார்மோன் அளவு மேம்பாட்டிற்கு
கியான் முத்ரா பயிற்ச் உடலில் பிட்யூட்டரி சுரப்பியை பாதிக்கிறது. இதனால், பிட்யூட்டரி சுரப்பியில் இரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்து ஹார்மோன் அளவை மேம்படுத்துகிறது.
மூளை செயல்பாட்டை மேம்படுத்த
கியான் முத்ரா செய்வதன் மூலம் நினைவாற்றலை மேம்படுத்தலாம். இந்த முத்ரா உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மூளைக்கு இரத்தம் எளிதில் செல்ல உதவுகிறது. இதனால், ஆக்ஸிஜன் மூளைக்கு எளிதில் சென்று மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

கியான் முத்ரா செய்யும் முறை
- இந்த முத்ரா செய்ய முதலில்பத்மாசனத்தில் உட்கார வேண்டும்.
- பின், உள்ளங்கைகளை மேல்நோக்கி, முழங்கால்களில் வைத்துக் கொள்ளலாம்.
- இப்போது ஆள்காட்டி விரலை கட்டை விரலின் நுனியில் வைக்க வேண்டும்.
- இந்த நேரத்தில் மற்ற விரல்களை நேராக வைத்திருக்க வேண்டும்.
- இந்த ஆசனம் செய்யும் போது கண்களை மூடிக்கொண்டு ஆழமான நீண்ட சுவாசம் எடுக்கவும்.
- மேலும் சுவாசத்தில் கவனம் செலுத்தி, இந்நிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
இந்த முத்ரா செய்ய விரும்புபவர்கள் தகுதியான யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் செய்யலாம். இதன் பலன்கள் அனைத்தும் பெற கியான் முத்ராவை சரியாக செய்வது அவசியமாகும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: Surya Mudra Benefits: இந்த சிம்பிள் முத்ரா செய்யுங்க. பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.!
Image Source: Freepik