Yoga Asanas For Lower Body Fat: ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் அதிக உடல் எடையுடன் காணப்படுவர். குறிப்பாக, பெரும்பாலான பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் போது அவர்களின் உடலின் கீழ் பகுதியில் கொழுப்பு குவியலாம். இதனால் தோரணை மோசமடையத் தொடங்குகிறது.
இந்த கொழுப்பைக் கரைக்க, மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளைக் கையாள்கின்றனர். ஆனால் உணவு மேம்பாட்டின் மூலம் மட்டும் கொழுப்பை நீக்க முடியாது. ஆரோக்கியமான உணவுடன் உடற்பயிற்சி மற்றும் யோகா அவசியமாகும். முறையான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் யோகா செய்யலாம். இவை உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். இதில் யோகாசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் உடலின் கீழ் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைக்க சில யோகாசனங்கள் குறித்துக் கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Leg Strengthening Yoga: உங்க கால்கள் எப்போதும் வலுவாக இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.
உடலின் கீழ் பகுதியில் கொழுப்பைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்
வசிஷ்டாசனம்
இந்த ஆசனம் செய்வது இடுப்பு, வயிறு மற்றும் தொடைகளின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. யோகாவைத் தொடங்கும் முன் வார்ம் அப் மற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகளைச் செய்யலாம். வசிஷ்டாசனத்தில் ஒரு புறம் தங்கி உடல் எடையை சமநிலைப்படுத்த வேண்டும். இது உடலின் கீழ் பகுதியின் தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கொழுப்பைக் குறைக்கிறது.
- வசிஷ்டாசனம் செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
- மேலும், இது மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- முதுகுத் தண்டு அல்லது உடலின் வேறு எந்த பகுதியிலும் வலி பிரச்சனை கொண்டவர்கள் வசிஷ்டாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga And Meditation Benefits: தினமும் தியானம் செஞ்சா இந்த பலன்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
உட்கடாசனம்
இந்த ஆசனம் நாற்காலி போஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உடல் கொழுப்பைக் குறைக்க மற்றும் ஃபிட்டாக இருக்க தினமும் இந்த பயிற்சி செய்யலாம். இதைச் செய்வதன் மூலம் கால்கள், தொடைகள், மற்றும் இடுப்புப் பகுதியில் குவிந்துள்ள கொழுப்பைக் குறைத்து, தசைகளை வலுவாக்குகிறது. உட்கடாசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- இந்த ஆசனத்தின் மூலம் தொடைகள் மற்றும் முதுகுத்தண்டு வலுவடைந்து காணப்படும்.
- உட்கடாசனத்தின் மூலம் உடலில் இரத்த ஓட்டம் மேம்பாடு அடைந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது.
வியாக்ராசனம்
வியாக்ராசனம் புலி போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வது உடலின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இது உடலின் தோரணையை மேம்படுத்த உதவுகிறது. இதன் வழக்கமான பயிற்சி தொடை மற்றும் இடுப்பு பகுதியில் குவிந்துள்ள கொழுப்பை அகற்றுவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
- வியாக்ராசனம் செய்வதன் மூலம் வயிறு, இடுப்பு மற்றும் தொடை தசைகள் வலுவடையும்.
- வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை அகற்ற இந்த ஆசனம் உதவுகிறது.
இந்த ஆசனங்கள் அனைத்தும் உடலின் கீழ் பகுதியின் கொழுப்பை அகற்ற உதவுகிறது. எனினும், ஏதேனும் நோயுடன் போராடினால், முதலில் மருத்துவரை அணுகி யோகாசிரியரின் உதவியுடன் மட்டுமே இந்த ஆசனங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!
Image Source: Freepik