Hakini Yoga Benefits: ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இந்த முத்ரா செஞ்சா ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

  • SHARE
  • FOLLOW
Hakini Yoga Benefits: ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இந்த முத்ரா செஞ்சா ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.


What Are The Benefits Of Hakini Mudra: இன்று பலரும் மன அழுத்தம், பணிச்சுமை என பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இது அவர்களின் தவறான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஏற்படலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால், வேறு சில முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். மேலும், இது உடலை சோர்வாகவும், பலவீனமாகவும் உணர வைக்கும். இந்த அறிகுறிகளைக் குறைக்க யோகா பெரிதும் உதவுகிறது.

ஏனெனில், யோகா செய்வது உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. யோகா தூக்கத்தை மேம்படுத்துவதுடன், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தையும் விரைவாகக் குறைக்க உதவுகிறது. அந்த வகையில் யோகாவில் சிறந்து விளங்கும் ஹக்கினி முத்ரா பல்வேறு நோய்களை எளிதாக சமாளிக்க உதவுகிறது. இதில் ஹக்கினி முத்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எப்படி செய்யலாம் என்பது குறித்து யோகா பயிற்றுவிப்பாளர் வந்தனா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Surya Mudra Benefits: இந்த சிம்பிள் முத்ரா செய்யுங்க. பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.!

ஏன் ஹக்கினி முத்ரா

ஹக்கினி முத்ரா செய்வதன் மூலம் உடலின் ஐந்து உறுப்புகளை சமநிலைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஐந்து விரல்கள், ஐந்து உறுப்புகளின் சின்னங்களாகக் கருதப்படுகிறது. இதில் கட்டை விரல் நெருப்பாகவும், ஆள்காட்டி விரல் காற்றாகவும், நடுவிரல் ஆகாயம், மோதிர விரல் பூமியாக மற்றும் சுண்டு விரல் நீராகவும் கருதப்படுகிறது. இந்த ஆசனத்தை இரு கைகளாலும் செய்யும் போது அக்குபிரஷர் ஏற்படுகிறது. இது உடலின் ஐந்து உறுப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது.

ஹக்கினி முத்ரா செய்வதன் நன்மைகள்

யோகா பயிற்சியாளரின் கூற்றுப்படி, ஒரு நபர் இந்த ஹக்கினி முத்ரா ஆசனத்தை செய்வதன் மூலம் உடல் மற்றும் மனரீதியான நலன்களைப் பெற முடியும். இந்த முத்திரையைத் தினமும் செய்வது மூளையும் முன்பகுதி தூண்டப்பட்டு, மூளை சக்தியை அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவற்றைக் குறைக்கிறது. இந்த ஹக்கினி முத்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

  • ஹக்கினி முத்ராவை வழக்கமாக செய்வது மூளைக்கு ஓய்வு அளிக்கிறது.
  • மேலும், மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்குகிறது.
  • ஹக்கினி முத்ரா செய்வது ஒரு நபரின் உள்ளுணர்வு சக்தியை மேம்படுத்தும்.
  • இந்த முத்ரா செய்வதன் மூலம் ஒருவர் நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.
  • ஹக்கினி முத்ரா இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.

ஹக்கினி முத்ரா செய்யும் முறை

  • இந்த முத்ரா செய்ய, முதலில் பத்மாசனத்தில் அமர வேண்டும்.
  • பின் கண்களை மூடி, இரு கண்களுக்கும் இடையே ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
  • இந்நிலையில் இருக்கும் போது இரு கைகளின் விரல் நுனிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.
  • இதில் விரல் நுனியில் சிறிது அழுத்தம் தரவும்.
  • பின் ஆழமான மற்றும் நீண்ட சுவாசத்தை எடுக்க வேண்டும்.
  • இந்நிலையில் மனதில் ஓம் என்று உச்சரிக்க வேண்டும்.
  • தொடக்கத்தில் 10 நிமிடங்களுக்கு இந்நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம். அதன் பிறகு படிப்படியாக பயிற்சியை 30 நிமிடங்களாக அதிகரிக்கலாம்.

யோகா அல்லது தோரணையின் பலன்களைப் பெற விரும்புபவர்கள், யோகா பயிற்றுவிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் செய்யலாம். தொடக்கத்தில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படின், பின் கண்களைத் திறந்து பார்ப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். எனவே மன அழுத்தம் நீங்க ஹக்கினி முத்ரா செய்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Brain Health Yoga: உங்க மூளைத் திறன் அதிகரிக்க, இந்த யோகாசனம் எல்லாம் டிரை பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Shashankasana Benefits: உடல் எடை மட்டுமல்ல இந்த பிரச்சனைக்கும் சூப்பர் தீர்வைத் தரும் ஷஷாங்காசனா!

Disclaimer