Expert

Shashankasana Benefits: உடல் எடை மட்டுமல்ல இந்த பிரச்சனைக்கும் சூப்பர் தீர்வைத் தரும் ஷஷாங்காசனா!

  • SHARE
  • FOLLOW
Shashankasana Benefits: உடல் எடை மட்டுமல்ல இந்த பிரச்சனைக்கும் சூப்பர் தீர்வைத் தரும் ஷஷாங்காசனா!

இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க அன்றாட வாழ்க்கை முறையில் தினந்தோறும் யோகா மற்றும் தியானம் செய்யலாம். இதற்கு சிறந்த யோகாசனமாக ஷஷாங்காசனத்தை செய்யலாம். இதில் தினமும் ஷஷாங்காசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து யோகாசிரியர் ரஜ்னீஷ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga And Meditation Benefits: தினமும் தியானம் செஞ்சா இந்த பலன்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

ஷஷாங்காசனம் யோகாவின் நன்மைகள்

ஷஷாங்காசனம் யோகாவை தினந்தோறும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

மன ஆரோக்கியம்

ஷஷாங்கசனத்தின் வழக்கமான பயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த ஆசனம் உடலுக்கும், மனதிற்கும் அமைதியையும், உறுதியையும் வழங்குகிறது. இவை மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

தூக்கமின்மை பிரச்சனைக்கு

இந்த ஆசனத்தை செய்வது, தூக்கமின்மை பிரச்சனைகளை நீக்குவதுடன், நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது. இரவு தூக்கத்தைப் பெறாதவர்கள் இந்த ஆசனம் செய்வது சிறந்த பலனைத் தரும்.

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க

ஷஷாங்காசன பயிற்சி செய்வது வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் விதமாக ஷஷாங்காசனா அமைகிறது. இதனுடன் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Acidity: அசிடிட்டியில் இருந்து விரைவில் விடுபட இந்த யோகா செய்யுங்க.

உடல் சமநிலை அடைய

உடல் சமநிலையை மேம்படுத்தவும், தசைகளை பலப்படுத்தவும் ஷஷாங்காசன பயிற்சி உதவுகிறது. இந்த ஆசனம் செய்வது வயிற்றின் தசைகளையும், இடுப்பின் பின் பகுதியையும் சீராக வைக்க உதவுகிறது. இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வதன் மூலம் இடுப்பு தசைகள் வலுவடைந்து சமநிலையில் வைக்க உதவுகிறது.

முதுகெலும்பு பிரச்சனைக்கு

ஷஷாங்காசனம் செய்வது இடுப்பு தசைகளை பலப்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனத்தின் வழக்கமான பயிற்சி முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆசனம் இடுப்பின் பின்புற தசைகளை பலப்படுத்துகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த யோகாசனம் செய்வது மிகுந்த பலனளிக்கும்.

இந்த ஆசனங்கள் செய்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நலன்களைப் பெறலாம். எனினும், யோகா நிபுணரின் ஆலோசனையின்றி யோகா பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யோகாசிரியரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனத்தை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Gyan Mudra Benefits: அற்புத நன்மைகளை அள்ளித் தரும் கியான் முத்ரா! இப்படி செஞ்சி பாருங்க

Image Source: Freepik

Read Next

Yoga for gastric: வாயு தொல்லையால் அவதியா? உடனே நிவாரணம் பெற இந்த ஆசனத்தை செய்யுங்க!

Disclaimer