Henna cream to reduce hair loss: கோடைக்காலம், குளிர்காலம் எந்த எந்த காலமாக இருந்தாலும் முடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, கோடைக்காலத்தில் அதிகரித்த வியர்வை, அரிப்பு மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால் முடி உதிர்வு, முடி வறட்சி, நுனி முடிபிளவு உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த, பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறு முடி பராமரிப்புக்கும், இயற்கையாகவே கருமையான முடியை பெறுவதற்கும் ஒரு சிறந்த இயற்கை வைத்தியமாக மருதாணி அமைகிறது. மருதாணி தலைமுடிக்கு ஊட்டச்சத்து, நிறம் மற்றும் பளபளப்பை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடியை கருமையாக்க இன்று பலரும் பல்வேறு ரசாயனங்கள் கலந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் எந்த வித ரசாயனங்களின் பக்க விளைவுகள் இல்லாமல் தலைமுடியைப் பாதுகாக்க மருதாணி உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: டை அடிக்காமல் வீட்டில் உள்ள இந்த பொருளை கலந்து தடவுங்க., பாதிப்பு இல்லாம வெள்ளை முடி கருப்பாகும்!
மருதாணி க்ரீம்
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை, அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ரசாயன அடிப்படையிலான முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் பலரும் வறண்ட, ஒட்டும் மற்றும் உயிரற்ற முடி போன்ற முடி பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இது தவிர, பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்றவற்றையும் எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில், ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் பதிலாக இயற்கையான முடி பராமரிப்புப் பொருளாக மருதாணி க்ரீமைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். இது பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஹென்னா அல்லது ஹென்னா க்ரீம் - எது சிறந்தது?
பொதுவாக, தலைமுடியில் மருதாணியைப் பயன்படுத்தினால் வெள்ளை முடி சிவப்பு நிறமாக மாறலாம். இந்நிலையில், இயற்கையான கருப்பு அல்லது பழுப்பு நிற முடியைப் பெற விரும்புபவர்கள் நெல்லிக்காய், ஹென்னா போன்ற ஆயுர்வேத மூலிகைகளை இன்னும் பிற மூலிகைகளுடன் இணைத்து தயாரித்த ஹென்னா கிரீமைப் பயன்படுத்தலாம். இது நரை முடியை மறைத்து, முடிக்கு புதிய நிறத்தை அளிக்கிறது. மேலும் ஹென்னா கிரீம் ஆனது பக்க விளைவுகள் இல்லாத ஒரு இயற்கையான தீர்வாகும்.
முடிக்கு ஹென்னா கிரீம் தரும் நன்மைகள்
இயற்கை ஹேர் கண்டிஷனராக
ஹென்னா கிரீம் முடியை மென்மையாக்க உதவும் ஒரு இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. கூடுதலாக, இது உச்சந்தலை மற்றும் முடியை வேர் முதல் நுனி வரை ஊட்டமளிப்பதன் மூலம் முடியை பலப்படுத்த உதவுகிறது. மேலும் இது முடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியை ஈரப்பதாக்கவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இதில் சேர்க்கப்படும் கூடுதல் மூலிகைகள் தலைமுடியை வளர்க்கின்றன.
எளிதாக தடவுவதற்கு
ஹென்னா கிரீமைத் தலைமுடிக்கு தடவுவது எளிதானது என்பதால், அதை நாமே எளிதாக தடவலாம். இதைத் தடவிய பிறகு ஓய்வெடுக்கலாம் அல்லது வேறு ஏதாவது வேலை இருப்பின், அதை செய்து முடிக்கலாம். இதை நம் வீட்டிலேயே எளிதாக தடவலாம் என்பதால் இதற்காக ஒரு சலூனுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதை தேய்த்து லேசான ஷாம்பூவைப் பயன்படுத்திக் கழுவினால் முடி நிறம் நீண்ட காலம் நீடிப்பதை உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உணவுமுறை முதல் மன அழுத்தம் வரை.. முன்கூட்டியே முடி நரைப்பதற்கான 5 பொதுவான காரணங்கள்
முடி பராமரிப்புக்கு
ஹென்னா கிரீம் தலைமுடிக்கு நல்ல நிறத்தைத் தருவது மட்டுமல்லாமல், முடிக்கு ஊட்டமளிக்கவும் ஏதுவாக அமைகிறது. இது முடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுவதுடன், அரிப்பு மற்றும் உச்சந்தலை எரிச்சலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதத்திற்கு இரண்டு முறை மருதாணி தடவுவதன் மூலம் தலைமுடியை வலுப்படுத்தலாம். மேலும் இது முடிக்கு நல்ல பளபளப்பைத் தருகிறது. எனவே இது உண்மையிலேயே முடிக்கு இயற்கையான பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது.
oil-for-dry-hair-1747073861644.jpg
பாதுகாப்பான தீர்வாக
கெமிக்கல் சாயங்கள் நிறைந்த மற்ற பொருள்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், ஹென்னாவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். ரசாயன அடிப்படையிலான ஹேர் சாயங்களில் எத்தனாலமைன், டைத்தனாலமைன் மற்றும் ட்ரைத்தனாலமைன் உள்ளிட்ட அம்மோனியா இருக்கலாம். இந்நிலையில் ஹென்னா கிரீம் பயன்படுத்துவதன் மூலம் எந்த தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் பக்க விளைவுகள் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
மேலும், ரசாயன சாயங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அதன் நீண்டநாள் பயன்பாடு புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தலாம். இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், ஹென்னா கிரீம் எந்த எதிர்மறையான பக்க விளைவுகளும் இல்லாமல் அற்புதமான முடிவுகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தலைமுடி ஈரமா இருக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யவே செய்யாதீங்க.. அப்றம் பிரச்சனை உங்களுக்குத் தான்
Image Source: Freepik