Most common cause of premature grey hair: அன்றாட வாழ்வில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் முடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை மற்றும் பராமரிப்பு இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் முடி உடைதல், முடி உதிர்தல், நுனி முடிபிளவு மற்றும் முடி முன்கூட்டியே நரைத்து போவது உள்ளிட்ட பல தரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
ஆம். கண்ணாடியைப் பார்த்து தலைமுடியை சீவும் போது நரைமுடி இருப்பதை பலரும் பார்த்திருப்பார்கள். இது அவர்களை வயதாவது போல உணர்த்துவது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு செயல்பாடுகளில் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இதைப் பார்த்த உடன் அவர்களுக்கு நிறைய கேள்விகள் தோன்றலாம். அவ்வாறு, முடி முன்கூட்டியே நரைப்பதற்கு என்ன காரணங்கள் இருக்கலாம், இந்த நிலை தீவிரமானதா உள்ளிட்ட கேள்விகள் அடிக்கடி எழும்.
ஆனால், உண்மையில் முன்கூட்டியே நரைப்பது மிகவும் பொதுவானதாகும். அதாவது தலைமுடி சராசரி வயதை விட முன்னதாகவே, அதன் இயற்கையான நிறமியை இழக்கும்போது இது நிகழக்கூடியதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Grey Hair: முடி நரைப்பதற்கு ஆயுர்வேதம் கூறும் காரணம் என்ன தெரியுமா?
முன்கூட்டிய முடி நரைப்பதற்கான அறிகுறிகள்
இவ்வாறு தலைமுடியின் இயற்கையான நிறமி இழக்கும் போது சில அறிகுறிகள் தோன்றலாம்.
- இதன் மிகவும் தெளிவான அறிகுறிகளில் சில வெள்ளி, சாம்பல் அல்லது வெள்ளை முடிகள் கருமையான இழைகளிலிருந்து வெளியே வருவதாகும்.
- பொதுவாக நரைமுடி முன்பக்க முடியின் ஓரத்தில் தோன்றுகிறது. அதன் பிறகு, அது மெதுவாக உச்சந்தலையில் பரவுகிறது.
- சில சமயங்களில், மக்கள் தங்களது தலைமுடியில் ஒட்டு மொத்த நிறமாற்றம் அல்லது சில பகுதிகளில் வெள்ளை முடியில் அசாதாரண அதிகரிப்பு போன்றவற்றைக் கவனிக்கலாம்.
முடி முன்கூட்டியே நரைப்பது பொதுவானதாக இருப்பினும், அது எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி அவர்கள் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் முன்கூட்டியே முடி நரைப்பதற்கான ஐந்து சாத்தியமான காரணங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
திருமதி முகர்ஜியின் கூற்றுப்படி, “எப்போது வயதோடு இணைக்கப்படாத பல காரணிகள் உள்ளன. பொதுவாக, நரை முடி வயதானவுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் இது எப்போதும் அப்படி இருக்காது. முடி நிறத்தில் ஏற்படும் மாற்றமானது நிறமி படிப்படியாகக் குறைவதால் ஏற்படக்கூடியதாகும். முடி வேரில் மெலனின் உற்பத்தி குறைந்து, நிறமி இல்லாததால் புதிய முடிகள் வளரும்போது இது நிகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: இளம் வயதில் நரை முடி பிரச்சனையா? கருகரு முடியைப் பெற இந்த இரண்டு பொருள்கள் போதும்
தலைமுடி நரைப்பதற்கான காரணங்கள்
- தலைமுடி புரதத்தால் ஆனதாகும். ஆனால், குறைந்த அளவிலான புரத உட்கொள்ளல் முடி நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.
- தலைமுடியின் ஆரம்ப கால நரைமுடியானது மரபியல் காரணமாக நம் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளிடமிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம்.
- தாமிரம், செலினியம், இரும்பு, கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள் போன்ற முக்கிய தாதுக்களின் பற்றாக்குறையின் காரணமாக மெலனின் உற்பத்தியில் குறைவு ஏற்படலாம்.
- காபி, தேநீர், ஆல்கஹால், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரை, சிவப்பு இறைச்சி மற்றும் வறுத்த, காரமான மற்றும் அமில உணவுகளை அதிகமாக உட்கொள்வது முடி நுண்குழாய்களை அடையக்கூடிய ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் குறைக்கிறது.
- நீண்ட காலமாக மன அழுத்தம், மனக்கவலை மற்றும் பதட்டம் போன்றவற்றை அனுபவிப்பவர்கள் ஒரு காலத்தில் முன்கூட்டியே முடி நரைப்பதைக் கவனிப்பர்.
இது போன்ற ஏராளமான காரணங்களால் முன்கூட்டியே தலைமுடி நரைக்கும் பிரச்சனை ஏற்படலாம். இதனைத் தவிர்ப்பதன் மூலம் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனையா? உடனே இதை எல்லாம் கட்டாயம் செய்யுங்க
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version