Best Yoga Asanas For Acidity: இன்றைய காலகட்டத்தில் தவறான உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பலரும் பலவிதமான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் அசிடிட்டி ஏற்படுவது பொதுவானதாக மாறிவிட்டது. குறிப்பாக, அதிகம் எண்ணெய் அல்லது காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர, உணவைச் சரியாக மென்று சாப்பிடாதது, அளவுக்கு அதிகமாக டீ, காபி அருந்துவது அல்லது புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணங்களால் அசிடிட்டி ஏற்படலாம்.
அசிடிட்டி காரணமாக உணவு உண்ட பிறகு, புளிப்பு ஏப்பம், வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படும். இதிலிருந்து நிவாரணம் பெற சிலர் மருந்துகளை உட்கொள்ளத் தொடங்குகின்றனர். ஆனால், இந்த மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இந்த அசிடிட்டி பிரச்சனையை நீக்க எந்தஒரு பக்கவிளைவும் இல்லாத யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதில் அசிடிட்டிக்கான யோகாசனங்களைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga During Periods: மாதவிடாயின் போது யோகா செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
அசிடிட்டியிலிருந்து விடுபட யோகாசனங்கள்
ஹலாசனா
செரிமான ஆரோக்கியத்திற்காக இந்த யோகாசனா பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆசனம் செய்யும் போது, உடல் கலப்பை போல் காட்சியளிக்கிறது. இது ஹலாசனா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ஹலாசனா செய்யும் முறை
- இந்த ஆசனம் செய்ய, முதலில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் கைகளை உடலுக்கு நெருக்கமாகவும், உள்ளங்கைகளை தரையில் எதிர்கொள்ளுமாறு வைக்க வேண்டும்.
- அதன் பிறகு, மூச்சை உள்ளிழுக்கும் போது மெதுவாக கால்களை உயர்த்தி, 90 டிகிரி கோணத்தை உருவாக்க வேண்டும்.
- முதுகை மேலே தூக்கி மூச்சை வெளியிட வேண்டும்.
- பின் மெதுவாக கால் விரல்களை தரையில் தொட முயற்சிக்க வேண்டும். இந்நிலையில் சுவாசிக்க வேண்டும்.
- இந்த வசதிக்காக, கைகளை இடுப்புக்கு பின்னால் வைக்கவும்.
- இந்நிலையில் 30 விநாடிகள் இருந்து, பின்னர் மெதுவாக ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க
பாசிமேத்தனாசனம்
அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற பாசிமேத்தனாசனம் சிறந்த யோகாசனம் ஆகும். இந்த ஆசனத்தை வழக்கமாக செய்வதன் மூலம் செரிமான அமைப்பைப் பலப்படுத்துகிறது. இது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
பாசிமேத்தனாசனம் செய்யும் முறை
- இந்த ஆசனத்தை மேற்கொள்ள முதலில் சுகாசனத்தில் அமர வேண்டும்.
- இப்போது உங்கள் இரு கால்களையும் நேராக முன்னால் வைத்து உட்கார வேண்டும். இதில் குதிகால் மற்றும் கால்விரல்கள் இரண்டும் ஒன்றாக இருக்கும்.
- இந்நிலையில் மூச்சை வெளியேற்றி முன்னோக்கி குனியும் போது, இரு கைகளாலும் இரு கால்களின் கால்விரல்களையும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- பின், நெற்றியை முழங்கால்களில் வைத்து, இரு முழங்கைகளும் தரையில் இருக்குமாறு வைக்க வேண்டும்.
- இந்நிலையில் 30 முதல் 60 விநாடிகள் வைத்திருந்து மெதுவாக சுவாசிக்க வேண்டும்.
- இப்போது தொடக்க நிலைக்குத் திரும்பலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க
வஜ்ராசனம்
வஜ்ராசனம் செய்வது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது வயிறு தொடர்பான பல கடுமையான பிரச்சனைகளைச் சமாளிக்க பயனுள்ளதாக அமைகிறது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்து வருவது, வயிற்று வாயு, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெற உதவுகிறது.
வஜ்ராசனம் செய்யும் முறை
- இந்த ஆசனம் செய்ய, முதலில் தரையில் முழங்காலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
- பின் முதுகுத்தண்டு மற்றும் தலையை நேராக வைத்து, கைகளை முழங்கால்களில் வைக்க வேண்டும்.
- குதிகால்களை ஒருவருக்கொருவர் சற்று தள்ளி வைத்து, பின் கண்களை மூடிக் கொண்டு சாதாரணமாக சுவாசிக்க வேண்டும்.
- குறைந்தது பத்து நிமிடங்களாவது இந்நிலையில் இருக்க வேண்டும்.
இந்த ஆசனங்களைச் செய்து வருவதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
Image Source: Freepik