Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க

கண்பார்வையை மேம்படுத்த உதவும் யோகா தரும் நன்மைகள்

கண் பராமரிப்பிற்காக செய்யப்படும் யோகாசனங்கள் கண்களுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

கண்களுக்கு ஓய்வு

கண் பயிற்சிகளை செய்வது கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கும். மேலும், கண்களின் அழுத்தம் குறைந்து கண் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga After Dinner: இரவில் நிம்மதியான உறக்கம் பெற வேண்டுமா? இந்த யோகாசனங்கள் செய்யுங்க

கண் சுருக்கங்கள் நீங்க

கண்களுக்கு அருகில் ஏற்படும் சுருக்கங்களை நீக்க யோகாசனங்கள் உதவுகின்றன. கண்களில் அழுத்தம் ஏற்படும் போது, கண்களைச் சுற்றியுள்ள தோலில் சுருக்கங்கள் ஏற்படலாம். யோகா செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய செல்களை உருவாக்கத் தூண்டும்.

கருவளையங்கள் நீங்க

தொடர்ந்து யோகா செய்து வருவது, கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களை நீக்கும். யோகா செய்வது கண்களின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தோலில் உள்ள கருமையை நீக்குகிறது. மேலும் இது நிறமி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தருகிறது.

கண் பார்வை மேம்பாட்டிற்கு

வழக்கமான யோகா செய்து வருவது, கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். இது விழித்திரை தானாகவே கண் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?

கண் பார்வையை மேம்படுத்த யோகா செய்யும் முறை

யோகா நிபுணர் ஸ்மிருதி அவர்களின் கூற்றுப்படி, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறப்பு யோகாக்கள் செய்யலாம். இந்த யோகாவை செய்வதற்கான சரியான வழியைக் காண்போம்.

  • காலையில் சூரிய ஒளியின் முன் உட்கார வேண்டும்.
  • பின், இரு கண்களிலிருந்தும் மூக்கைப் பார்க்க முயற்சிக்க வேண்டும்.
  • இந்நிலையில் கண்களை சிறிது நேரம் வைக்கலாம்.
  • பிறகு, கண்களில் இருந்து மேல்நோக்கி நகர்த்த வேண்டும்.
  • இந்த யோகாவை தினமும் ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

யோகா நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த யோகாவை குழந்தைகள் கூட செய்யலாம். கண்பார்வை அதிகரிக்க ட்ராடக் மற்றும் பிற யோகாசனங்களையும் செய்யலாம். இந்த யோகாசனங்களுடன் உணவில் இரத்தத்தை அதிகரிக்க உதவும் பீட்ரூட், ஆப்பிள், கீரை, கேரட், மாதுளை, பப்பாளி போன்றவற்றை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stamina Yoga: உங்கள் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான யோகாசனங்கள் என்னென்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Yoga For Heart: BP-யை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 3 யோகாசனங்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்