Yoga During Periods Is Safe Or Not: தினந்தோறும் யோகா செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும். உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு யோகா பயனுள்ளதாக அமையும். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், நோய்த்தொற்று அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், நாள்தோறும் யோகா, உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
ஆனால், பெண்கள் மாதவிடாய் காலத்திலும் யோகா செய்யலாமா என்ற கேள்வி எழுகிறது. ஆம். மாதவிடாயின் போது பெண்கள் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம். மாதவிடாயின் போது செய்யும் சில யோகாசனங்கள், அந்த காலத்தில் ஏற்படும் வயிற்றுப்பிடிப்புகள், சோர்வு, வீக்கம் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாயின் போது யோகாசனங்கள் எந்த அளவு நன்மை தருகிறது என்பது குறித்து யோகா பயிற்றுவிப்பாளர் ரிப்ஸி அரோரா அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Brain Health Yoga: உங்க மூளைத் திறன் அதிகரிக்க, இந்த யோகாசனம் எல்லாம் டிரை பண்ணுங்க
மாதவிடாய் காலத்தில் யோகா நன்மைகள்
யோகா பயிற்றுவிப்பாளர் ரிப்ஸி அரோரா அவர்களின் கூற்றுப்படி, பெண்கள் மாதவிடாய் காலத்தில் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். ஆனால், பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் காலத்தில் யோகாசனங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தி விடுவர். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாயின் போது ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க யோகா உதவுகிறது. இவை பெண்களின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
மன அழுத்தம் நீங்க
மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இதன் காரணமாக, பெரும்பாலான பெண்கள் மன அழுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் நிகழும். ஆனால், யோகாசனங்கள் செய்வதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை நிர்வகிக்கலாம்.
நல்ல தூக்கத்திற்கு
யோகா செய்வது உடலுக்கு ஆற்றலைத் தருவதுடன், நல்ல தூக்கத்தையும் தருகிறது. இது பெண்களின் உடல் வலியை நீக்கி நன்றாக தூங்க வழி வகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க
ஹார்மோன் சமநிலை
உடலில் இயங்கும் பல ஹார்மோன்கள், மூளைக்கு நேரடியாகத் தொடர்புடையவை ஆகும். மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் சமநிலையற்று ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க பெண்கள் பிராணாயாமம் செய்யலாம். இது அவர்களின் மூளையை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கட்டுப்பாடற்ற ஹார்மோன்கள் சீராக இயங்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு
பெண்கள் பலரும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைச் சந்திப்பர். இந்த சூழ்நிலையில் யோகா செய்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை வழக்கமான நிலைக்கு மாற்ற முடியும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மாதவிடாயின் போது ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
வயிற்றுப் பிடிப்பு நீங்க
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்றுப்பிடிப்பால் அவதிப்படுவர். இந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசம் போன்ற யோகாசனங்களைச் செய்வது உடலில் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பெண்ணின் கருப்பையில் அழுத்தத்தைக் குறைத்து, வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தருகிறது.
மாதவிடாய் காலத்தில் யோகா செய்வது, இந்த காலகட்டத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. அதன் படி, பிராணாயாமம், மத்ஸ்யாசனம், புஜங்காசனம், மர்ஜாரி போன்ற ஆசனங்களை தங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க
Image Source: Freepik