கண் பார்வையை மேம்படுத்த உதவும் முக்கியமான 5 யோகாசனங்கள்!

  • SHARE
  • FOLLOW
கண் பார்வையை மேம்படுத்த உதவும் முக்கியமான 5 யோகாசனங்கள்!

நீங்கள் முதன் முறையாக யோகா பயிற்சியில் ஈடுபடுவோராக இருந்தால், பின்வரும் போஸ்களை ஆசிரியர் அல்லது யோகா நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ் செய்யலாம்.

நீங்கள் ஏதேனும் வகையான கண் தொற்று, கிளௌகோமா அல்லது கண் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், தயவு செய்து சிரஷாசனா போன்ற தலைகீழ் ஆசானங்களை செய்ய வேண்டாம். டிராடக் தியானம் உங்கள் பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது உங்கள் பார்வையை மேம்படுத்துவதோடு உங்கள் கவனம், நினைவாற்றல் மற்றும் செறிவு ஆகியவற்றை அதிகரிக்கும்.

1.அதோமுக ஸ்வனாசனா:

செய்முறை:

  • நான்கு கால்களிலும் நிற்பது போல், டேபிள்டாப் நிலையில் ஆரம்பிக்க வேண்டும்.
  • தோள்கள் மற்றும் முழங்கால்களுக்கு நேராக உள்ளங்கை மற்றும் கால்களை வைக்கவும்.
  • இப்போது மூச்சை வெளிவிட்டு முழங்கால்களை நேராக்குங்கள் உங்கள் உள்ளங்கைகளின் நிலையை மாற்ற வேண்டாம் முடிந்தால், உங்கள் குதிகால் கீழே தள்ளுங்கள் அல்லது மாற்றாக உங்கள் முழங்கால்களை மெதுவாக வளைக்கலாம்
  • உங்கள் கண்ணை உங்கள் தொப்புளை பார்த்தபடி கீழ் நோக்கி வைக்க வேண்டும்.
yoga-asanas-to-improve-eye-sight

இதையும் படிங்க: நீங்கள் இரவில் லேட்டாக தூங்குபவரா? - இது உங்களுக்கான எச்சரிக்கை!

நன்மைகள்:

  • உங்கள் கால்கள், பாதங்கள், தோள்கள் மற்றும் கைகளுக்கு வலிமையைக் கொடுக்கும்
  • இந்த ஆசனம் உங்கள் உடலின் எடையை உங்கள் உள்ளங்கைகளுக்கும் பாதங்களுக்கும் இடையில் சுமந்து செல்வதால், எடை தாங்கும் தன்மை ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • மெனோபாஸ் அறிகுறிகளை நீக்குகிறது.

2.சர்வாங்காசனம்

செய்முறை:

  • தரையில் நிமிர்ந்த நிலையில் படுத்து கைகளை இடுப்புக்கு கீழ் வைத்துக்கொள்ளுங்கள்.
  • இப்போது மெதுவாக உங்களுடைய கால்கள் இரண்டையும், இடுப்புடன் சேர்த்து மேல் நோக்கி உயர்த்தவும்.
  • உங்களுடைய உள்ளங்கைகளை பின்புறத்தில் வைத்து இடுப்பை தாங்கிப்பிடித்துக்கொள்ளவும்.
  • தோள்பட்டை, உடம்பு, இடுப்பு, கால்கள் மற்றும் பாதங்களை ஒரே நேர்க்கோட்டில் சீராக கொண்டு வர முயற்சிக்கவும்.
  • உங்கள் கன்னத்தை உங்கள் மார்பில் வைத்து, உங்கள் கால்களை பார்க்கவும்.
yoga-asanas-to-improve-eye-sight

நன்மைகள்:

  • தைராய்டு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆசனம் பரிந்துரைக்கப்படுகிறது.
  • இது உடலின் சமநிலை மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
  • தலைகீழ் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது, இதனால் முகத்திற்கு சிறந்த இரத்த விநியோகத்தை அனுமதிக்கிறது மற்றும் சருமத்தை ஊட்டமளிக்கிறது.

3.சிரசாசனம்:

செய்முறை:

  • விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து உட்காரவும்.
  • உச்சந்தலையை விரிப்பின் மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும்.
  • தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும்.
  • உங்களால் முடிந்தவரை நிமிர்ந்து உங்கள் தலையை கீழே வைத்து உடலை மேல் நோக்கி நகர்த்தவும்.
  • உங்கள் கால்களை நேராக இணைக்கவும் அல்லது வளைத்து வைக்கவும்
yoga-asanas-to-improve-eye-sight

இதையும் படிங்க: மழைக்காலத்தில் நோய்களை விரட்ட… இதை பாலோவ் பண்ணுங்க!

நன்மைகள்:

  • வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
  • கவலை மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
    உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது
  • உங்கள் முழு உடலுக்கும் வலிமை கொடுக்கிறது.
  • இது கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகுக்கு வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

4.ஹலாசனா

செய்முறை:

  • விரிப்பின் மீது முதுகை வைத்து நீட்டி படுத்துக்கொள்ளவும்.
  • இரண்டு உள்ளங்கைகளையும் தரைக்கு அருகே வைத்து, கால்களை மெல்ல பின்னோக்கி மடக்கவும்.
  • இப்போது உங்கள் உள்ளங்கைகள் முதுகிற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
  • கால்கள் முகத்திற்கு மேல் பின்புறமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த போஸை உங்களால் முடிந்த நேரம் வரை செய்யலாம்.
yoga-asanas-to-improve-eye-sight

நன்மைகள்:

  • இது மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்குகிறது
  • ஹலாசனா உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது
  • தைராய்டு, சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை இயல்பாக்குகிறது
  • மாதவிடாய் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயனுள்ளது.

5.பாதஹஸ்தாசனம்

செய்முறை:

  • விரிப்பின் மீது நேராக நிமிர்ந்து நிற்கவும்.
  • மூச்சை இழுத்து விட்டு, முழங்கால்களை வளைத்து உடலை கீழே குனிந்து கைகளை விரிப்பின் மீது வைக்கவும்.
  • தலையை கீழே இறக்கி, கழுத்து மற்றும் தோள்களை ரிலாக்ஸாக வைத்திருக்கவும்.
  • உங்கள் கால்களின் இருபுறமும் உள்ளங்கைகளை நன்றாக விரித்து வைக்கவும்.
  • மெதுவாக உங்கள் முழங்கால்களை நேராக்கி, மார்பை உங்கள் தொடைகளுக்கு அருகில் கொண்டு வரவும்.
yoga-asanas-to-improve-eye-sight

நன்மைகள்:

  • பாதஹஸ்தாசனம் உடலை மிகவும் நெகிழ வைக்கிறது.
  • முதுகு மற்றும் கால் தசைகளை நீட்டுகிறது
  • அதிகப்படியான வயிற்று கொழுப்பை அகற்ற உதவுகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலை குறைக்கிறது.
  • பல வயிற்று நோய்களை குணப்படுத்துகிறது

image source: Freepik

Read Next

Brain Health Yoga: உங்க மூளைத் திறன் அதிகரிக்க, இந்த யோகாசனம் எல்லாம் டிரை பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்