Expert

Mudra For Thyroid: தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபட இந்த ஒரு முத்ரா போதும்.!

  • SHARE
  • FOLLOW
Mudra For Thyroid: தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபட இந்த ஒரு முத்ரா போதும்.!


Best Mudra For Thyroid: ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் மோசமான பழக்க வழக்கங்களால், மக்கள் பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதன் படி, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்ற பிரச்சனைகளால் அதிகம் பாதிப்படைகின்றனர். தைராய்டு என்பது, கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி ஆகும். இவை அதிகமாகச் செயல்படும் போது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.

உண்மையில் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்த தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியம் ஆகும். அதே சமயம், உடலின் மற்ற செயல்பாடுகளுக்கும் வளர்ச்சிதை மாற்றம் முக்கியமானதாகும். தைராய்டு சுரப்பி பாதிப்பால், ஒரு நபர் பதடம், பலவீனம், அமைதியின்மை, உடல் எடை அதிகரிப்பு மற்றும் இழப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க தைராய்டு குணப்படுத்த உதவும் யோகா தோரணை குறித்து யோகா நிபுணர் சோனா பாட்டியா தனது இன்ஸ்ட்கிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Hakini Yoga Benefits: ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இந்த முத்ரா செஞ்சா ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

தைராய்டு குணப்படுத்த உதவும் முத்ரா

தைராய்டைக் குணப்படுத்த ஷங்க முத்ரா (Shankh Mudra) பெரிதும் உதவுகிறது. உடலில் தைராய்டு பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் மாதவிடாய் ஒழுங்கற்ற பிரச்சனையைச் சந்திக்க நேரிடலாம். இதனால், மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். எனவே தைராய்டைக் கட்டுக்குள் வைக்க இந்த முத்ராவைத் தொடர்ந்து செய்யலாம். இந்த முத்ரா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

திணறல் பிரச்சனையைக் குறைக்க

சங்க முத்ரா பயிற்சி செய்வது குழந்தைகளின் திகைப்பு பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது. மேலும் பேச முடிதாய குழந்தைகள் அல்லது பேசும் போது திணறல் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த முத்ரா செய்யலாம்.

தைராய்டு பிரச்சனையைக் குறைக்க

இந்த ஆசனத்தைக் கடைபிடிப்பதன் மூலம் தைராய்டு பிரச்சனகளில் இருந்து விடுபட முடியும். இந்த முத்ராவை தொடர்ந்து செய்வது தைராய்டு சுரப்பியைக் குணப்படுத்த உதவுகிறது. தைராய்டை நிர்வகிக்க இந்த முத்ராவைத் தொடர்ந்து செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Leg Strengthening Yoga: உங்க கால்கள் எப்போதும் வலுவாக இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.

ஷங்க முத்ரா செய்யும் முறை (How To Do Shankh Mudra Step By Step)

  • இந்த முத்ரா செய்ய முதலில் தரையில் வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
  • பின் இடது கையைத் திறந்து வலது கையின் கட்டை விரலை உள்ளங்கையால் பிடிக்க வேண்டும்.
  • அதன் பின், இடது கையின் கட்டை விரலை மேல்நோக்கி வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, இந்நிலையை மார்பில் வைக்க வேண்டும்.
  • இந்த தோரணையைத் தினந்தோறும் 30 நிமிடங்கள் பயிற்சி செய்வதன் மூலம், தைராய்டில் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

கட்டுப்பாடற்ற தைராய்டு பிரச்சனையால், விரைவான உடல் எடை அதிகரிப்பு மற்றும் இழப்பு அறிகுறிகள் தோன்றலாம். எனவே தைராய்டு பிரச்சனைகளைக் குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதை ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது தைராய்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஷங்க முத்ரா பயிற்சி செய்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்சியாளரின் உதவியை நாடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Acid Reflux: ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட இந்த யோகாசனங்களை செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Hakini Yoga Benefits: ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கா? இந்த முத்ரா செஞ்சா ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்து போய்டும்.

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version