Best Yoga For Memory Improvement: நீங்கள் படிப்பில் பின்தங்கியிருக்கிறார்களா? எப்போதும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? அபோ யோகா பண்ணுங்க. யோகா பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் மனதளவிலும், உடலளவிலும் வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். மேலும், உங்கள் ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்களின் ஞாபக சக்தி அதிகரிக்க, நீங்கள் செய்ய வேண்டிய யோகா ஆசனங்கள் இங்கே.
பிராணயாமம்
பிராணயாமாம் சுவாசத்தை கட்டுப்படுத்த ஒரு சிறந்த கருவியாகும். இது நமது சுவாசம் மற்றும் நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, நம்மில் மன அழுத்தம் பெருமளவில் குறைக்கப்படுகிறது. மேலும், இது நமது நினைவாற்றலை அதிகரிக்கிறது.

தடாசனம்
இரண்டு கால்களையும் நெருக்கமாக வைத்து நேராக நிற்கவும். இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில் வைக்க வேண்டும். உங்களால் முடிந்தவரை இதைச் செய்யுங்கள். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால், ஞாபக சக்தி மேம்படும். உயரமும் கூடும்.
விருக்ஷாசனம்
இது ஒரு காலில் நின்று செய்யும் ஆசனம். ஒரு காலை தரையில் வைத்து மற்றொரு காலை மற்ற காலின் தொடையில் வைக்கவும். கைகளை வணக்க தோரணையில் வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் உடலை நன்கு சமநிலைப்படுத்தும். மேலும், கவனத்தை மேம்படுத்த முடியும்.
இதையும் படிங்க: உங்க மெமரி பவர் அதிகமாக தினமும் இத நீங்க செஞ்சா போதும்
பாசிமோத்தாசனம்
கால்களை முன்னோக்கி நீட்டி உட்காரவும். பின்னர் உங்கள் கைகளால் கால்விரல்களைத் தொடவும். இதை முடிந்தவரை பல முறை செய்யவும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதால் முதுகுத்தண்டு வலுவடைகிறது. மூளைக்கு சிறந்த இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் நினைவாற்றல் மேம்படும்.
பலாசனம்
முதலில் நீங்கள் உட்கார வேண்டும். உங்கள் பின்பக்கம் உங்கள் குதிகால் மீது இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டி, உங்கள் தலையை தரையில் தாழ்த்தவும். பின்னர் கைகளால் கால்களைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த யோகாசனம் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சர்வாங்காசனம்
முதலில் நீங்கள் படுக்க வேண்டும். பின்னர் கால்களை உயர்த்தவும். உங்கள் கைகளை கவனமாக தரையில் தாழ்த்தவும். இப்படி தினமும் இதனை செய்து வந்தால் மூளைக்கு இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். இதன் விளைவாக, ஞாபக சக்தி அபரிமிதமாக அதிகரிக்கிறது.
சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரத்தில் மொத்தம் 12 ஆசனங்கள் உள்ளன. இவை அனைத்தும் முறையாக செய்யப்பட வேண்டும். இவை நம் உடலுக்கு பெரும் ஆற்றலைத் தருகின்றன. மேலும், மன வலிமையையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது.
Image Source: Freepik