வொர்கவுட் என்பது உடலில் இருக்கும் கூடுதல் எடையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது. இதன் காரணமாக உங்கள் உடல் ஃபிட்டாக மற்றும் வலுவாக இருக்கும்.
ஆனால் பல மாதங்கள் ஜிம்மிற்கு சென்றாலும் உடல் எடையில் பெரிய மாற்றமில்லை என புலம்புவோர் உண்டு. ஆனால் விரைவாக உடல் எடையைக் குறைப்பது என்பது, ஆரோக்கியமான உணவு, அடிக்கடி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான உத்தி அவசியம்.
இருப்பினும், சில உடற்பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை மிக,மிக விரைவாக கரைக்கும். உங்கள் தொப்பையை விரைவாக கரைக்கக்கூடிய 5 உடற்பயிற்சிகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
அதிதீவிர இடைவெளி பயிற்சி (HIIT):

அதிக-தீவிர இடைவெளி பயிற்சியின் (HIIT) என்பது 15 நிமிடத்திற்கு தொடர்ந்து தீவிரமாக செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும். இது பர்பீஸ், ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் ரன்னிங் போன்ற உடற்பயிற்சிகளை உள்ளடக்கியது. HIIT அதன் பயனுள்ள கொழுப்பை எரிக்கும் பண்புகள் மற்றும் உடற்பயிற்சியின் பின்னர் கலோரிகளை எரிப்பதற்காக நன்கு அறியப்பட்டதாகும்.
ஸ்குவாட்:
ஸ்குவாட் பயிற்சி வழக்கமாக தொடைகள் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
ஸ்குவாட் கொழுப்பை எரிப்பதற்கும் மெலிந்த தசையைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது எலும்புகளை வலுவாக்குவதோடு, உடலின் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கிறது.
உங்கள் தசைகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் நீங்கள் வயதாகும்போது அவற்றின் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கின்றன. இந்த பயிற்சியானது அதனை சரிய செய்ய உதவும்.
ரன்னிங் Or ஜாக்கிங்:
ரன்னிங் மூலம் எடையை குறைப்பதோடு, வயிற்று கொழுப்பையும் எரிக்கலாம். இது உங்கள் உடலின் கலோரிகளை எரிக்க தொடர்ந்து உதவுகிறது.
தினமும் ரன்னிங் செல்வது உடல் கட்டமைப்பை மேம்படுத்தவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடற்பயிற்சிகளை விட ரன்னிங் கொழுப்பை அதிக அளவில் எரிக்கும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரென்த் டிரெய்னிங்:
வலிமை பயிற்சி எனப்படும் ஸ்ட்ரென்த் டிரெய்னிங், தசைகளை வலுப்படுத்துவதோடு, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது.
ஓவர் ஹெட் பிரஸ், பெஞ்ச் பிரஸ் போன்ற உடற்பயிற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். காலப்போக்கில், தசை திசு ஓய்வில் இருக்கும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதன் மூலம் கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது.
பாக்ஸிங்:

பாக்ஸிங் மற்றும் கிக் பாக்ஸிங் போன்ற உடற்பயிற்சிகள் ஸ்ட்ரென்த் மற்றும் கார்டியோ பயிற்சிகான பலன்களை ஒன்றாக வழங்குகிறது. இது தனிநபர்கள் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த வீரியமான பயிற்சிகள் உடலில் உள்ள ஒவ்வொரு தசைகளிலும் வேலை செய்து, கலோரிகளை எரிப்பதை அதிகரித்து, எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
Image Source: Freepik