Foods for Mental Health: உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே வாழ்வின் முக்கிய அங்கம் ஆகும். தினந்தோறும் நாம் கடைபிடிக்கும் சில அன்றாட செயல்முறைகளின் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அந்த வகையில் யோகா அல்லது உடற்பயிற்சியும், நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளும் அடங்கும். தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம், நம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். மேலும், மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் செய்யும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆரோக்கியமான உணவுகள்
அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருள்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. இப்போது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சில ஆரோக்கியமான உணவு வகைகளைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Lassi Benefits: சுவை தரும் மாம்பழ லஸ்ஸியில் இத்தனை நன்மைகளா?
அவகேடோ
வெண்ணெய் பழமான அவகேடோ ஆரோக்கியமான கொழுப்பு வகைகளைக் கொண்ட ஆதாரம் ஆகும். இந்த பழத்தின் நான்கில் மூன்று பங்கு அளவிலான கலோரிகள் கொழுப்பிலிருந்து வருவதாகும். இது நல்ல கொழுப்பு அல்லது மோனோசாச்சுரேட்டட் எனப்படுகிறது. இதில் உள்ள டிரிப்டோபான் என்ற அமினோ அமிலங்கள் மன ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய வகையில் அமைகிறது. மேலும், டிரிப்டோபன் உள்ள உணவுகள் மன உறுதியை மேம்படுத்துவதுடன், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
பச்சை காய்கறிகள், கீரைகள்
அடைந்த பச்சை காய்கறிகள், உடல் மற்றும் மன நலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்த வகைகள், முட்டைக்கோஸ், கீரை வகைகள், கருவேப்பிலை போன்றவற்றில் கால்சியம், இரும்பு, ஃபோலேட், ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
வால்நட்ஸ்
அக்ரூட் பருப்புகளான வால்நட்ஸில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வகை ஒமேகா 3 அமிலங்கள், ஒட்டு மொத்த மூளை ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியதாக அமைகின்றன. இவை மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பதுடன், மனச்சோர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகளையும் குறைக்கிறது.
காளான்கள்
காளான்கள் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சூப்பர் ஃபுட்டாகக் கருதப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு சமநிலையற்று இருந்தால், உயர் மற்றும் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இது உடலளவிலும், மனதளவிலும் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த காளான்கள் உதவுகின்றன. எனவே, இதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
பீன்ஸ்
பீன்ஸில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்துகள் இரத்த சர்க்கரை அளவை உறுதிபடுத்துவதாக அமைகிறது. பீன்ஸில் டிரிப்டோபன்கள் நிறைந்துள்ளன. இவை செரட்டோனின் உற்பத்தியை ஆதரிப்பதுடன், மன ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. எனவே, இவை மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ப்ரோக்கோலி
மன ஆரோக்கியத்திற்கு உதவும் ஃபோலேட்டுகள் ப்ரோக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் ஃப்ரீபயாடிக்குகளாக செயல்படுகின்றன. மேலும், நார்ச்சத்துகள், வைட்டமின் சி உள்ளிட்டவையும் ப்ரோக்கோலியில் உள்ளன. மேலும், ப்ரோக்கோலியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் குடல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன. இதன் விளைவாக, மனச்சோர்வு உண்டாவதற்கான அறிகுறிகளையும் குறைக்கின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
Image Source: Freepik