Stress Relieving Foods: மன அழுத்தத்தை குறைக்க… இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Stress Relieving Foods: மன அழுத்தத்தை குறைக்க… இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!


மன அழுத்தமும் பதட்டமும் ஒவ்வொரிடத்திலும் ஏற்படக்கூடியது. இதற்கு நாம் உண்ணும் உணவுகளில் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சில சூப்பர்ஃபுட்கள் உள்ளன.

அந்த வகையான உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது, தளர்வை ஊக்குவிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலவைகளை வழங்குகின்றன.

“நல்ல மன ஆரோக்கியத்தைப் பேணுவதில் உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது” என சில ஆய்வு முடிவுகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

சில உணவுமுறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம், உடலில் உள்ள கார்டிசோலின் அளவு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கலாம். இவற்றை உடனே குறைக்க உதவும் சில மேஜிக் உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்…

உணவு எப்படி மன அழுத்தத்தைக் குறைக்கிறது?

உடலின் கார்டிசோல் உற்பத்தி அதிகரிக்கும் போது மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது. இந்த தருணங்களில், மக்கள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட, இனிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவு சாப்பிடுவார்கள். இந்த உயர் கொழுப்பு உணவுகள் தற்காலிகமாக நமது மனநிலையை மேம்படுத்தி, நம் மூளையின் இன்ப மையங்களைத் தூண்டினாலும், இறுதியில் அவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிப்பதோடு, மனச்சோர்வு மற்றும் பதட்டமான நிலைகளுக்கு நம் பாதிப்பை அதிகரிக்கும்.

superfood-to-reduce-anxiety-and-stress

இதையும் படிங்க: Sugar vs Honey: சர்க்கரை நோயாளிகளே உஷார்; தேனை இதற்கு பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

காஃபின், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் அனைத்தும் கார்டிசோலின் அளவை உயர்த்தலாம். எனவே அவற்றிற்கு மாற்றாக புரதம், வைட்டமின்களைக் கொண்ட, பதட்டம் மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் சோர்வு போன்ற பல உடல் பிரச்சனைகளைக் குறைக்க உதவும் சில சூப்பர்ஃபுட்களை எடுத்துக்கொள்ளலாம்… அவை இதோ,

தேநீர்:

பிளாக் டீ மற்றும் சில வகையான மூலிகை டீகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். அவற்றில் உள்ள எல்-தியானைன் மனதைத் தளர்த்தும்.

ப்ரீபயாடிக்:

ப்ரீபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்க உதவுகின்றன, இது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. ப்ரீபயாடிக்குகளில் தயிர், ஆப்பிள், பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: நீங்க அலாரம் வச்சி எழுந்திருப்பீங்களா?… அப்போ ஜாக்கிரதையா இருங்க!

மெக்னீசியம்:

மெக்னீசியம் நிறைந்த உணவுகளும் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. அவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி ஓய்வெடுக்கின்றன. அவகேடோ, வாழைப்பழம் மற்றும் கொட்டைகள் மெக்னீசியத்தின் முக்கிய ஆதாரங்கள்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:

ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, மிளகுத்தூள், கொய்யா போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் உடலில் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கார்டிசோல் அளவைக் குறைப்பதன் மூலமாக, உணர்ச்சி மற்றும் உடல் அழுத்தத்தை குறைக்க வைட்டமின் சி பயன்படும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உணவுகள் மட்டும் மன அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது என்றாலும், அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த கவலையை குறைக்கும் முயற்சியில் ஒரு சிறிய பங்காக அமையும் என நிபுணர்கள் கூறுகின்றன. மேலும் சரியான உணவை எடுத்துக்கொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வேலை மற்றும் குடும்பத்திற்கு சரியாக நேரம் ஒதுக்குதல், உடற்பயிற்சி ஆகியவை மூலமாக அமைதியான மனநிலையைப் பெறலாம்.

Image source: Freepik

Read Next

Stress Eating:ஜாக்கிரதை… மன அழுத்தத்தில் இதைச் செய்தால் கல்லீரல் பாதிக்கப்படும்!

Disclaimer

குறிச்சொற்கள்