Probiotics Foods To Control High Blood Pressure: இந்த பிஸியான வாழ்க்கைக்கு மத்தியில், சரியாக தூங்கவும், சாப்பிடவும் நமக்கு நேரம் கிடைப்பதில்லை. இந்நிலையில், பசியை போக்க நாம் ஆரோக்கிய உணவுகளை தேடி செல்லாமல் ஜங்க் ஃபுட் அல்லது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுகிறோம். இவை பசியை போக்க சிறந்த உணவாக இருந்தாலும், அதன் நுகர்வு உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்.
ஜங்க் ஃபுட் மற்றும் வேலை பளு உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கை முறையுடன் உணவில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, புரோபயாடிக் உணவுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Coffee Drinking Time: இரவில் காபி குடிப்பது நல்லதா, கெட்டதா? உண்மை இதோ!
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் புரோபயாடிக் உணவுகள்

உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, வயிற்றில் இருக்கும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் உணவை ஜீரணிக்க முக்கியம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தயிர் தவிர, புளிக்கவைக்கப்பட்ட பொருட்களில் புரோபயாடிக்குகளின் பண்புகள் அதிகம் காணப்படுகிறது. இதில் மோர், தோக்லா, கஞ்சி போன்றவற்றை அடங்கும்.
தயிர்
புரோபயாடிக் பண்புகள் தயிரில் காணப்படுகின்றன. இதில், அதிக அளவு கால்சியம் உள்ளது. இதனுடன், தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் மற்றும் பிற ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால், தயிரை தொடர்ந்து உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் அதை உணவுடன் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Mushroom Health Benefits: முழங்கால் வழியை நீக்கும் காளான்; எப்படி சாப்பிடணும்?
தோக்லா

குஜராத்தில் உள்ள தோக்லா மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சிற்றுண்டி. தோக்லா என்பது அரிசி மற்றும் உளுந்து மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த சிற்றுண்டி. இதில் புரோபயாடிக் பண்புகள் உள்ளன, அவை உங்கள் குடலுக்கு நன்மை பயக்கும். டோக்லாவில் கலோரிகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் விரும்புபவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மோர்
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற அருகிலுள்ள மாநிலங்களில் மோர் மிகவும் பிரபலம். இது புளிக்கவைக்கப்படுகிறது, லாக்டோபாகிலஸ் அமிலோபிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் இதில் காணப்படுகின்றன, இது வயிற்று பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் உணவுக்கு முன் அல்லது பின் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Cashewnuts: இவங்க எல்லாம் முந்திரி சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
இட்லி மற்றும் தோசை மாவு

இட்லி மற்றும் தோசைக்கு மாவு தயாரிக்கும் போது அதை நாம் புளிக்க வைக்கிறோம். இதனால், இதிலும் புரோபயாடிக்குகள் அதிகமாக காணப்படுகின்றனர். உளுத்தம் பருப்பும் அரிசியும் அரைத்து சிறிது நேரம் விடவும். புளித்ததும் தோசை செய்யப் பயன்படுகிறது.
கஞ்சி
இது மீந்த சாதத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதை தண்ணீரை பயன்படுத்தி சில நாட்கள் புளிக்க வைக்கிறோம். இதன் காரணமாக இது புரோபயாடிக்குகளாக செயல்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : திடீர் மயக்கம், ஒற்றைத் தலைவலியா?… இவை இந்த பயங்கர நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!
இது தவிர இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, தொடர்ந்து யோகா செய்யுங்கள். யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்த பிரச்சனையை பெருமளவு கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, உணவில் மாற்றம் செய்வதன் மூலம் பல நோய்களைத் தடுக்கலாம்.
Pic Courtesy: Freepik