High Cholesterol Foods To Avoid: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகையவை, கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்டும் அபாயம் அதிகரிக்கிறது.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வக்க, அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்க நீங்கள் ஒதுக்க வேண்டிய கொழுப்பு நிறைந்த உணவுகள் இங்கே.

கொழுப்பு நிறைந்த உணவுகள் (High Cholesterol Foods)
வறுத்த உணவுகள்
வறுத்த உணவுகளில் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள், இதனை தவிர்ப்பது நல்லது.
இனிப்பு வகைகள்
சர்க்கரை வகைகள் தேவையற்ற கொழுப்பை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Stomach Upset Remedy: மலச்சிக்கலை சரிசெய்ய உதவும் பெஸ்ட் வீட்டு வைத்தியம் இதுதான்!
குப்பை உணவுகள்
குப்பை உணவுகளில் அதிகபடியான மைதா, சீஸ் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்கள் இணைக்கப்படுகின்றன. இதனை உட்கொள்வதால், உடலில் கொழுப்பு அளவு அதிகரித்து, இதயம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பாக்கெட் உணவுகளில் அதிகபடியான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது.
சிவப்பு இறைச்சி
ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியில் அதிக கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக கோழி மற்றும் வான்கோழியின் மார்பு பகுதி அல்லது மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை தவிர்த்து, உங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம் என்பதை உணவியல் நிபுணரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
Image Source: Freepik