Coffee and Turmeric Face Pack for Glowing Skin: ஒவ்வொரு பெண்ணும் தன் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், மோசமான வாழ்க்கை முறை, ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் தூசி மாசு ஆகியவை இயற்கையான பிரகாசத்தை கெடுத்துவிடுகிறது.
இதனால், உங்களின் முகம் பிரகாரத்தை இழந்து கலையில்லாமல் காணப்படும். நீங்களும் இந்த பிரச்சினையை சந்திக்கிறீர்கள் என்றால், இதற்கான சூப்பர் டிப்ஸ் ஒன்றை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
இந்த பதிவும் உதவலாம் : Coffee for skin health : காஃபி சருமத்திற்கு நல்லதா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!
நாம் வீட்டு சமையலறையில் இருக்கும் 3 பொருட்களை வைத்து உங்கள் சருமத்தை வெறும் பத்து நிமிடத்தில் பளபளப்பாக மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம், வீட்டில் உள்ள காஃபி, மஞ்சள் தூள் மற்றும் தயிரை வைத்து வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காபி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

காபி தூள் - 1 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி.
தயிர் - 1 டீஸ்பூன்.
காபி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
- ஃபேஸ் பேக் செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள், மஞ்சள் மற்றும் தயிர் சேர்க்கவும்.
- பின்னர் இதை கட்டுப்படாமல் நன்கு கலக்கவும். தேவை பட்டால் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
- இப்போது உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவி, ஈரம் இல்லாமல் நன்கு துடைக்கவும்.
- இதையடுத்து, இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
- முகத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அதை உலர வைக்கவும். பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்
காபி ஃபேஸ் பேக்கின் நன்மைகள்

மஞ்சளில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள கருமையை நீக்குகிறது. இது தவிர, இது வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடும் மற்றும் தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
தயிரில் உள்ள ஆல்பா ஹைட்ராக்சி அமிலம் முகப்பருவைக் குறைத்து சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. காபி இரத்த ஓட்டத்தைத் தூண்டும் ஒரு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டர். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
Pic Courtesy: Freepik