Coffee for skin health : காஃபி சருமத்திற்கு நல்லதா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Coffee for skin health : காஃபி சருமத்திற்கு நல்லதா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

ஆம், நமது உணவு முறை சரியில்லை என்றால், எவ்வளவு விலை உயர்ந்த பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்தினாலும் சரியான பலன் கிடைக்காது. சரியான உணவுகளை உண்பதால் சரும ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேரும். இதனால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

இயல்பாக சரும ஆரோக்கியத்திற்கு புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். அவற்றின் குறைபாடு காரணமாக, தோல் அதன் பளபளப்பை இழக்கத் தொடங்குகிறது. மேலும், சருமத்தில் வயதின் தாக்கமும் விரைவாகத் தெரியும். சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் காபி முக்கிய பங்கு வைப்பதாக நிபுணர்கள் கூடுகின்றனர். காஃபி சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

காபி சருமத்திற்கு நல்லதா?

காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது பற்றி இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான அளவில் காபி குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக சருமத்திற்கும் நல்லது. எனவே தான், இன்றும் சரும பராமரிப்புக்கான முகமூடிகளில் காபி பயன்படுத்தப்படுகிறது.

காஃபியை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் சருமம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் நிறமியை தடுக்கவும், தோல் வயதான தோற்றத்தை தடுக்கவும், பளபளப்பான சருமத்தை பராமரிக்கவும் உதவும்.

தோல் ஆரோக்கியத்திற்கு அவசியமான கொலாஜனை அதிகரிக்கும் அமிலம் காஃபியில் உள்ளது. இது தோல் ஒவ்வாமை மற்றும் கருவளையங்களை நீக்குவதற்கு உதவுகிறது. காஃபியை குடித்தாலும் சரி, பேஸ் பேக் ஆக பயன்படுத்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். இதில் உள்ள காஃபின் மனநிலையை ஆரோக்கியமாக வைக்கவும், நம்மை சுறுசுறுப்பாக்கவும் வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : நிறைய தண்ணீர் குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறுமா?

எவ்வளவு காஃபி குடிக்கணும்?

காபி குடித்தால் நமது நிறம் கருமையாகிவிடும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. நீங்கள் சரியான அளவில் காபி குடித்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது. அதன் சரியான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஒருவேளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், நிச்சயமாக அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இரவில் அதைக் குடிப்பது சரியானதாகக் கருதப்படுவதில்லை, ஏனெனில் அதில் காஃபின் உள்ளது மற்றும் இதன் காரணமாக தூக்க சுழற்சி தொந்தரவு செய்யலாம்.

Image Source: Freepik

Read Next

Skin Care Tips : உங்க முகம் எப்பவும் பளபளன்னு இளமையா இருக்கணுமா? பசும் நெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer