Benefits Of Ghee For Skin : நம் அனைவரின் வீடுகளிலும் நெய் இருக்கும். நெய் இல்லாமல் சாம்பார் முதல் பிரியாணி வரை எந்த உணவும் முழுமைபெறாது. இதை நாம் பெரும்பாலும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், சருமத்தை பளபளப்பாக்க நெய் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், இதில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, சருமத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் சரும வறட்சி பிரச்சனையை நீக்கும்.
நெய்யை நீங்கள் சரியான முறையில் சருமத்திற்கு பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை சுத்தம் செய்வதுடன், பல சரும பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும். பசு நெய்யை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Natural Remedies for Stress Pimples: மன அழுத்தத்தால் ஏற்படும் பருவை போக்க சிறந்த வழிகள்!
நெய் மற்றும் கடலை மாவு

உங்கள் முகத்தில் மங்கு போன்ற பிரச்சனை இருந்தால், இதற்கு நெய் மற்றும் கடலை மாவுடன் பேக் செய்து முகத்தில் தடவலாம். இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் இதைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
தேவையான பொருட்கள் :
நெய் - 2 டீஸ்பூன்.
கடலை மாவு - 2 ஸ்பூன்.
ஃபேஸ் பேக் செய்முறை :
ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் கடலை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் இதில் தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
இதற்குப் பிறகு, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் விடவும்.
பின்னர், உங்கள் முகத்தை குளிர்ந்த தண்ணீரால் சுத்தம் செய்யவும்.
இப்படி தொடர்ந்து செய்து வர சரும பிரச்சனை நீங்கும்.
டிப்ஸ்: முகத்தில் தடவிய பின் சோப்பை முகத்தில் பயன்படுத்தவே கூடாது.
இந்த பதிவும் உதவலாம் : Strawberry Face Scrub : சரும அழகை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரபை வீட்டிலேயே செய்யலாம்!
நெய் மற்றும் குங்குமப்பூ ஃபேஸ் பேக்

சருமம் மிகவும் வறண்ட மற்றும் மந்தமானதாக காணப்பட்டால், நெய் மற்றும் குங்குமப்பூ ஃபேஸ் பேக் மிகவும் உதவியாக இருக்கும். இது சருமத்தை பளபளப்பாக்குவதுடன் முகப்பருவை குறைக்கும்.
தேவையான பொருட்கள் :
நெய் - 1 டீஸ்பூன்.
குங்குமப்பூ - 2 டீஸ்பூன்.
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்.
ஃபேஸ் பேக் செய்யும் முறை :
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து, அதில் நெய், குங்குமப்பூ மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவும்.
பின் அதை 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
இதற்குப் பிறகு, உங்கள் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.
இப்படி நீங்கள் உங்கள் முகத்தில் நெய்யைப் பயன்படுத்தி வந்தால், சருமத்தை பளபளப்பாக மாற்றலாம்.
Image Source: Freepik