பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணவும்!

  • SHARE
  • FOLLOW
பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணவும்!


நீங்களும் பொடுகு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? எத்தனை ஷாம்புகள் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தப்பட்டும் எந்த பலனும் இல்லையா? அப்போ இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத டிப்ஸை முயற்சி செய்யவும். இந்த ஹேர் மாஸ்க்கை ஒருமுறை முயற்சி செய்து பார்த்தாலே பொடுகு தொல்லை நீங்கிவிடும். இப்போது அந்த குறிப்பு என்னவென்று பார்ப்போம்.

இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க்கை தலைமுடியில் தடவினால் கூந்தல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களில் இருந்து ஊட்டச்சத்தை அளிக்கின்றன. மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகினால் ஏற்படும் அரிப்பை குறைக்கிறது. மேலும், இந்த மாஸ்க் இயற்கையான கண்டிஷனராக செயல்படும்.

பொடுகை தொல்லையை நீக்க ஆயுர்வேத ஹேர் மாஸ்க்.!

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி தயிர்
5-7 நசுக்கிய கறிவேப்பிலை
2 அங்குல நொறுக்கப்பட்ட இஞ்சி

இதையும் படிங்க: Dandruff Treatment: பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபட இந்த 3 எளிய வழிகளை பின்பற்றுங்கள்!

ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது இந்த கலவையை 30 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும்.
  • பின்னர் கலவையை சால்ப்பில் தடவி 30 நிமிடங்கள் உலர விடவும்.
  • இப்போது ஆயுர்வேத ஷாம்பூவை வெதுவெதுப்பான நீரில் கலந்து தலையைக் கழுவினால் போதும்.
  • பொடுகு பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் இருமுறை மூன்று வாரங்களுக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதன் ஊட்டச்சத்துக்கள்..

  • கறிவேப்பிலையில் புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • தயிரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது உச்சந்தலையில் அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
  • இஞ்சி பொடுகு வளர்ச்சியைத் தடுக்கிறது.

ஆராய்ச்சி விவரங்கள்

2000 ஆம் ஆண்டில் 'இந்தியன் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜி' வெளியிட்ட அறிக்கையின்படி, தயிர், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க் பொடுகைக் குறைப்பதில் திறம்பட செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Image Source: Freepik

Read Next

Basil Leaves For Cholesterol: கெட்ட கொழுப்பை சீக்கிரம் குறைக்க துளசி இலையை இப்படி எடுத்துக்கோங்க

Disclaimer

குறிச்சொற்கள்