Hair Care Mask at Home: இயற்கையாகவே நரை முடியை கருப்பாக்க… இந்த ஹேர் மாஸ்குகள ட்ரை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Hair Care Mask at Home: இயற்கையாகவே நரை முடியை கருப்பாக்க… இந்த ஹேர் மாஸ்குகள ட்ரை பண்ணுங்க!

மீண்டும் மீண்டும் ப்ளீச்சிங் செய்தோ அல்லது ரசாயனங்களை தலையில் தடவியோ கூட முடியில் இருந்து நரையை நீக்கிவிடலாம் என அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை முடிக்கு காரணங்கள் என்ன?

முன்கூட்டிய நரை முடி வர பல காரணங்கள் உள்ளன. மரபியல் முதல் சுற்றுச்சூழல் காரணிகள் வரை பல காரணிகள் இருக்கலாம்.

பரம்பரை:

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளில் முடி முன்கூட்டியே நரைப்பதற்கு முக்கிய மற்றும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். பரம்பரை ரீதியாக இள நரை பிரச்சனை உள்ளவர்களுக்கு அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடருமென நிபுணர்கள் கூறுகின்றனர். சாம்பல் அல்லது வெள்ளை முடி என்பது மரபணு ரீதியாக மரபுரிமையாக உள்ளது.

நிறமி குறைபாடு:

மெலனின் உற்பத்தி குறைவாகவோ அல்லது இல்லாமலோ மெலனோசைட்டுகள் எனப்படும் மயிர்க்கால்களில் உள்ள செல்கள் இரண்டு நிறமிகளை உருவாக்குகின்றன. இந்த இரண்டு நிறமி மூலக்கூறுகளான பியோமெலனின் மற்றும் யூமெலனின் ஆகியவை மனிதர்களுக்கு இயற்கையான முடி நிறத்தை அளிக்கின்றன.

இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!

ஆனால் காலப்போக்கில் செல் மேற்பரப்பில் மெலனோசோம்களின் உற்பத்தியால் இவை படிப்படியாகக் குறைக்கப்படுகின்றன. எனவே, முடியின் தோற்றம் சாம்பல் அல்லது வெள்ளை நிறமாக மாறும்.

மன அழுத்தம்:

உளவியல் மன அழுத்தம் என்பது யாரையும் எந்த நேரத்திலும் பாதிக்கக்கூடிய ஒன்று. நீங்கள் உணரும் மன அழுத்தத்திற்கு ஏற்றார் போல் உடலும் எதிர்வினையாற்றக்கூடியது. மோசமான மனநிலை, அதிக மன அழுத்தம் ஆகியவை முடி உதிர்வு, நரைமுடி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

ஊட்டச்சத்து குறைபாடு:

வைட்டமின் பி-12 என்பது நரம்பு மண்டல ஆரோக்கியம், மூளை செயல்பாடு மற்றும் இதய தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். இது இரத்த சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகிறது. நம் உடல்கள் 90 சதவீதம் தண்ணீர், மீன் அல்லது இறைச்சியில் காணப்படும் புரதங்கள் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் போன்ற தாதுக்களால் ஆனது என்பதால் நமக்கு இது தேவைப்படுகிறது.

இதையும் படிங்க: Spectacles Marks on Face: கண்ணாடி போட்ட தழும்பை… இயற்கையான முறையில் எப்படி மறைக்கிறதுன்னு தெரிஞ்சிக்கோங்க!

நரை முடியை தடுக்க வீட்டிலேயே பலவகையான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் சில ஹேர் மாஸ்குகளை பார்க்கலாம்.

  • பிளாக் டீ ஹேர் மாஸ்க்:

பிளாக் டீயை உச்சந்தலையில் அப்ளே செய்வதன் மூலமாக விரைவில் மாற்றங்களை காணலாம். குளித்த பின் பிளாக் டீயை கொண்டு முடியை அலசுவதால் நரை முடி கருப்பாக மாற உதவும் எனக்கூறப்படுகிறது. மேலும் பிளாக் டீயை பயன்படுத்துவது கூந்தலின் மென்மை மற்றும் பளபளப்பை அதிகரிக்கும்.

  • பாதாம் ஆயில் மசாஜ்:

தேங்காய் எண்ணெய்க்குப் பிறகு பாதாம் எண்ணெய் கூந்தலுக்கு அதிக பலன்களை தரக்கூடியது. போகவே மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் வெள்ளை முடியைத் தவிர்க்க, பாதாம் எண்ணெயை சூடாக்கி உச்சந்தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும். இந்த எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, நரையையும் போக்குகிறது.

  • உருளைக்கிழங்கு ஹேர் மாஸ்க்:

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற, ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து, அந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும். அதன் பிறகு சிறிது தயிரை தலையில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்

  • பிளாக் காபி மாஸ்க்:

முடியின் வேர்களில் இருந்து கடைசி வரை எண்ணெய் தடவுவது போல், பிளாக் காபியை தடவவும். இப்படி செய்வதால் கருமையான முடி வெள்ளையாக மாறும். இந்த முறையில் கூந்தல் கருப்பாக மாற சிறிது நேரம் எடுக்கும். ஆனால் அது பாதுகாப்பானது. திறம்பட செயல்படுகிறது.

  • வெங்காயம்+ எலுமிச்சை சாறு ஹேர் பேக்:

முன்கூட்டிய நரையைத் தடுக்கும் பழமையான தீர்வுகளில் ஒன்று வெங்காயம். மேலும் இது எப்போதும் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்படலாம். வெங்காயம் நரை முடியை மாற்றுவது மட்டுமல்லாமல், அவற்றின் வைட்டமின் சி மூலம் அற்புதமான பிரகாசத்தையும் சேர்க்கிறது.

Image Source: Freepik

Read Next

Hair Detox: இந்த இரண்டே டீடாக்ஸ் பொருட்கள் போதும்… கூந்தல் பட்டு போல் மிருதுவா பளபளக்கும்!

Disclaimer

குறிச்சொற்கள்