நம்முடைய சருமம் மற்றும் உடலைப்போல நம் தலைமுடிக்கும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
முடி உதிர்தல், உடைதல் அல்லது வலுவிழத்தல், பளபளப்பு இல்லாமை போன்றவற்றால் நீங்கள் சிரமப்பட்டால், உங்கள் தலைமுடியை டீடாக்ஸ் செய்வதன் மூலம் இந்த எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். உண்மையில், டீடாக்ஸ் முடியை மட்டுமல்ல, உச்சந்தலையையும் பாதுகாக்க உதவுகிறது. எப்படி வயல் வளமாக இருந்தால் பயிர் நன்றாக இருக்கும், அதே போல் உச்சந்தலை நன்றாக இருந்தால் முடியும் நன்றாக இருக்கும்.

எவ்வித ரசாயனமும் இல்லாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் டீடாக்ஸ் செய்ய முடியும். இதன் மூலம், முடி உதிர்தல், வறண்ட முடி அல்லது பொடுகு போன்றவற்றை எளிதில் போக்கலாம்.
கூந்தலுக்கு டீடாக்ஸ் முக்கியமா?
வியர்வை, அழுக்கு, ரசாயனம் கலந்த முடி பராமரிப்பு பொருட்கள் போன்ற காரணங்களால் கூந்தல் சேதமடைகிறது. மேலும் பருவ காலத்திற்கு ஏற்றார் போல் முடி பாதிக்கப்படுவதால், அதனை இயற்கையான பொருட்களைக் கொண்டு அவ்வப்போது டீடாக்ஸ் செய்து கொள்வது அவசியம். கட்டாயம் மாதம் ஒருமுறையாவது டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
ஹேர் டிடாக்ஸ் என்பது உச்சந்தலையில் இருக்கும் அழுக்குகளை அகற்றி, முடியை சுதந்திரமாக சுவாசித்து வலிமை பெறும் வகையில் துளைகளைத் திறப்பதாகும். இதன் மூலமாக கூந்தல் வளர்ச்சி மட்டுமல்ல அதன் அடர்த்தி மற்றும் பிரகாசமும் அதிகரிக்கும்.
உச்சந்தலையில் டீடாக்ஸ் செய்வது எப்படி?
முடியை டீடாக்ஸ் செய்ய, உச்சந்தலையை ஆழமாக சுத்தம் செய்வது அவசியம். இதற்கு வினிகர், தயிர் போன்றவற்றை தலையில் தடவ வேண்டும். முடியிலும் ஸ்கரப்பிங் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், முடி மற்றும் உச்சந்தலையில் எலுமிச்சை சாற்றையும் தடவலாம். இதன் மூலம், முடியில் உள்ள அழுக்கு மற்றும் தொற்று எளிதில் நீங்கும்.
pH அளவை மேம்படுத்துகிறது:
தண்ணீர் மட்டுமின்றி, வினிகர் அல்லது தயிரை தலைமுடியில் தடவுவது உச்சந்தலையின் pH அளவை மேம்படுத்தி முடி உதிர்வதைத் தடுக்கிறது. நீங்கள் ஆப்பிள் சைடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை முடியில் தடவலாம் மற்றும் எலுமிச்சை ஒரு நல்ல வழி.
எண்ணெய் மசாஜ்:
1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர், 3 சொட்டு ரோஸ்மேரி ஆயில், 5 சொட்டு மின்ட் எசன்ஷியல் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் பெண்டோனைட் களிமண் ஆகியவற்றை ஒரு கிரீம் பதத்திற்கு கலக்கிக்கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும். 1 மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். 2-3 வாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும்.