முகத்தை சுத்தமாக வைத்திருப்பவர்கள் சில சமயங்களில் கால்களை சுத்தமாக வைத்திருப்பதில்லை. இதனால், பாதங்களில் விரிசல் ஏற்படுவது சகஜம்.
மோசமான சுகாதாரம் மட்டுமல்ல, தைராய்டு, வறண்ட சருமம் போன்ற நோய்களும் இதற்கு பங்களிக்கின்றன. பலருக்கு பாத வெடிப்புகள் ரத்தம் வரும் அளவிற்கு மோசமாக இருக்கும்.

இதற்கு காஸ்ட்லியான ஆன்டி கிராக் ஃபுட் கிரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில எளிய பொருட்களை கொண்டு கிரீம் தயாரிக்கலாம்.
இதையும் படிங்க: Tattoo Care: டாட்டூ குத்திய பின்.. இதையெல்லாம் கண்டிப்பா மறக்காதீங்க!
- இஞ்சி+எலுமிச்சை ஆயில் கிரீம்:
10 துளிகள் இஞ்சி எசன்ஷியல் ஆயில், 10 துளிகள் லெமன் எசன்ஷியல் ஆயில், இரண்டு டீஸ்பூன் பாதாம் ஆயில், 15 கிராம் தேனீ மெழுகு, 15 கிராம் தேங்காய் எண்ணெய் மற்றும் 15 கிராம் கொக்கோ பட்டர் ஆகியவை தேவை.
செய்முறை:
தேனீ மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் கொக்கோ பட்டர் ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு, குறைந்த தீயில் சூடுபடுத்தவும். இவை உருகியதும், பாதாம் ஆயில், இஞ்சி மற்றும் லெமன் எசன்ஷியல் ஆயில்களை சேர்க்கவும்.
இவற்றை நன்றாக கலந்து, கண்ணாடி ஜாடியில் சேகரித்துக்கொள்ளவும். இந்த ஃபுட் கிரீமை இரவு உறக்கச் செல்லும் முன்பு பாதங்களில் தடவி, சாக்ஸ் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
- பால் + தேன் ஃபுட் கிரீம்:
இரண்டு டீஸ்பூன் பால், ஒரு கப் தேன் மற்றும் அரை ஆரஞ்சு ஜூஸ்.
இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!
செய்முறை:
பால் மற்றும் தேனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறு தீயில் சூடாக்கவும். அத்துடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கிளறவும். அதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
அதை ஒரு ஜாடியில் சேமிக்கவும். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன், இந்த கிரீமை தடவி, சுமார் 40 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி கழுவவும்.
- லாவெண்டர் ஃபுட் கிரீம்:
15 சொட்டு லாவெண்டர் எசன்ஷியல் ஆயில், 1/2 கப் ஷியா பட்டர் மற்றும் 3/4 கப் தேங்காய் எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். கடாயை குறைந்த வெப்பத்தில் வைத்து ஷியா பட்டரை உருக வைக்கவும், அத்துடன் லாவெண்டர் ஆயில் சேர்க்கவும்.
அதை குளிர்வித்து ஒரு ஜாடியில் சேமிக்கவும். ஒவ்வொரு இரவும் உங்கள் கால்களை மசாஜ் செய்ய இந்த கிரீமை பயன்படுத்தவும். கிரீம் அப்ளே செய்த பிறகு, சாக்ஸ் போட மறக்காதீர்கள்.
ImageSource:Freepik