டாட்டூ குத்திக்கொள்வது இப்போது ட்ரெண்ட் ஆகிவிட்டது. சிலர் தங்கள் அன்புக்குரியவர்கள் மீதான அன்பைக் காட்ட டாட்டூ குத்துகிறார்கள், சிலர் காதலுக்காக பச்சை குத்திக் கொள்கிறார்கள். ஃபேஷனுக்காக டாட்டூ குத்திக்கொள்பவர்களும் உண்டு.
தங்களுக்கு பிடித்த சின்னங்கள், முகங்கள், கடவுள்கள் மற்றும் பெயர்களை டாட்டூ குத்திக்கொள்வது தற்போது அதிகமாகி வருகிறது.
ஆனால் டாட்டூ குத்திய பிறகு, ஸ்கின் கேரில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில், டாட்டூ குத்தப்பட்டுள்ள பகுதியில் அலர்ஜி மற்றும் சொறி வர வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கின்றனர். டாட்டூ குத்திய இடத்தில் சருமத்தை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்...
சன்ஸ்கிரீன் பயன்பாடு:
டாட்டூவை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். புற ஊதா கதிர்கள் படுவதால், டாட்டூவில் பயன்படுத்தப்படும் சில வகையான மைகளின் நிறங்கள் மங்கக்கூடும். மேலும், சூரியனின் கதிர்வீச்சால் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே டாட்டூ குத்திய நபர்கள் தங்களது சருமத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க SPF 30 சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். வெளியில் செல்கிறீர்கள் என்றால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இதைப் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைசிங்:
டாட்டூ குத்திய இடத்தில் உள்ள தோல் செல்கள் சேதமடைகின்றன. இதனால், அப்பகுதி ஈரப்பதத்தை இழந்து உயிரற்றதாக மாறுகிறது. புதிய செல் உற்பத்தியைத் தூண்டுவதற்கு, அந்தப் பகுதியில் மாய்ஸ்சரைசரை தடவ வேண்டும். மாய்ஸ்சரைசர் சருமத்தை குளிர்வித்து புதிய செல்கள் உற்பத்தியைத் தூண்டுகிறது.
தொற்று நோய்களில் கவனம்:
பச்சை குத்தப்பட்ட பகுதி மிகவும் உணர்திறன் கொண்டது. அந்த பகுதியில் புதிய செல்கள் பிறக்கும் வரை ஸ்கின் கேர் மாஸ்க், ஸ்க்ரப்கள், வேக்சிங் போன்றவற்றை செய்யாதீர்கள். சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்கு இதை செய்யாமல் இருப்பதன் மூலமாக தேவையற்ற நோய் தொற்றுகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம்.
இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!
ஸ்விம்மிங் கூடாது:
புதிதாக டாட்டூ குத்தியவர்கள் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஸ்விம்மிங் செய்வதை தவிர்க்க வேண்டும். நீச்சல்குளத்து நீரில் குளோரின் மற்றும் உப்பு உள்ளது. இவை டாட்டூ குத்திய பகுதியை மேலும் வறட்சியடையச் செய்கிறது. இதனால் டாட்டூவின் நிறமும் மங்கக்கூடும்.
Image Source: Freepik