Cinnamon Face Pack: முகத்தில் பருக்கள் சீக்கிரம் மறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் போதும்

  • SHARE
  • FOLLOW
Cinnamon Face Pack: முகத்தில் பருக்கள் சீக்கிரம் மறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் போதும்

அதே சமயம், சந்தையில் கிடைக்கும் ஃபேஸ் மாஸ்க்குப் பதிலாக, இயற்கையான ஃபேஸ் மாஸ்கைத் தயாரித்து பல்வேறு சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வீட்டிலேயே எளிதான முறையில் ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்றே இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை ஃபேஸ் பேக் ஆகும். இதை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Olive Oil For Skin: முகம் பளிச்சினு தங்கம் போல மின்ன ஆலிவ் எண்ணெய் ஒன்னு போதும்

இலவங்கப்பட்டை, பிரியாணி இலை ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

தேவையானவை

  • இலவங்கப்பட்டை தூள் - 2 தேக்கரண்டி
  • பிரியாணி இலை தூள் - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
  • தேன் - 2 தேக்கரண்டி
  • பச்சை பால் - தேவைக்கேற்ப

செய்முறை

  • இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க, பாத்திரம் ஒன்றில் 2 ஸ்பூன் அளவு இலவங்கப்பட்டை பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இதில் 1 ஸ்பூன் அளவிலான பிரியாணி இலை தூள் சேர்க்க வேண்டும்.
  • பின், இதில் கொடுக்கப்பட்ட அளவிலான எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து கெட்டியான கலவையாக மாற்ற வேண்டும்.
  • இந்த கலவை கெட்டியாக இருப்பின், அதில் சிறிது பால் சேர்க்கலாம்.
  • பிறகு, ஃபேஸ் வாஷ் மூலம் முகத்தைச் சுத்தம் செய்து இந்த ஃபேஸ் பேக்கே அப்ளை செய்யலாம்.
  • ஃபேஸ் பேக் பயன்படுத்திய பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும்.
  • பின் இந்த பேக் காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ளலாம்.

இலவங்கப்பட்டை, பிரியாணி இலை ஃபேஸ்பேக் நன்மைகள்

சுருக்கங்களைக் குறைக்க

பிரியாணி இலைகளில் உள்ள இரும்பு, கால்சியம், தாமிரம், மக்னீசியம், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் இலவங்கப்பட்டையின் ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக இணைந்தால், வயது காரணமாக ஏற்படும் முகச் சுருக்கங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Wrinkles Removing Tips: கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்க இந்த 3 பொருள்கள் போதும்.

பருக்களில் இருந்து விடுபட

இலவங்கப்பட்டை ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவை முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவுகிறது. முகத்தில் இருந்து பருக்கள் நீங்க இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை ஃபேஸ் பேக்கை வாரம் இரு முறை தடவுவது நன்மை தரும்.

நிறத்தை சமன் செய்ய

இலவங்கப்பட்டை, பிரியாணி இலை மற்றும் தேனில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மென்மையாக மாற்ற உதவுகிறது. சருமத்தின் நிறத்தை சமன் செய்ய, இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்திய பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம்.

இந்த வகையில் இலவங்கப்பட்டை மற்றும் பிரியாணி இலை ஃபேஸ் பேக் சிறந்த நன்மைகளைத் தருகிறது. எனினும், சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் ஒவ்வாமை, எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தும் முன்னதாக பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Dark Circles Face Pack: கருவளையங்கள் விரைவில் மறைய இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்க.

Image Source: Freepik

Read Next

மேக்கப் இல்லாமல் இயற்கை அழகுடன் ஜொலிக்க… இந்த 5 விஷயங்கள் போதும்!

Disclaimer