$
குளிர்காலத்தில் நமது சருமத்திற்கு கொஞ்சம் கூடுதல் பாதுகாப்பு தேவை. கோடை காலத்தைப் போலவே இந்தப் பருவத்திலும் சருமத்தைப் பராமரிப்பது மிகவும் அவசியம்.
மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதிலிருந்து லேசான சோப்பைப் பயன்படுத்துவது வரை, குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் சருமத்தை சிறப்பாக கவனிப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
குளிர் காலத்தில் தவிர்க்க வேண்டியவை:
குளிர்காலத்தில் தோல் அதன் இயற்கையான நெகிழ்ச்சித்தன்மையை இழக்கிறது. இதனால் நீங்கள் எந்த சோப்பைப் பயன்படுத்தினாலும் அல்லது நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தாலோ பிரச்சனை ஏற்படக்கூடும்.

குளிர்காலத்தில் குளிப்பதற்கு சோப்பை குறைவாக பயன்படுத்துவதே சிறந்த வழி. மிகவும் சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்க வேண்டாம். உடலை அதிகமாக தேய்க்க வேண்டாம். அதுமட்டுமின்றி, குளித்து முடித்த கையோடு மாய்ஸ்சரைசர் அல்லது எண்ணெயை சருமத்தின் மீது தடவுவது நல்லது.
இரவு தூங்கும் முன் செய்ய வேண்டியது என்ன?

குளிர்காலத்தில் வழக்கமான மாய்ஸ்சரைசருக்குப் பதிலாக ஆயில் பேஸ் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும். குறிப்பாக குளிர் காலத்தில் இரவு நேரங்களில் மாய்ஸ்சரைசர் தடவுவது, அது சருமத்திற்குள் நன்றாக ஊருடுவ வழி செய்யும். . இதன் காரணமாக, உங்கள் தோலின் உலர்ந்த பகுதிகளான முழங்கைகள், முழங்கால்கள், உதடுகள் போன்றவை குணமாகும். கைகள் மற்றும் கால்களை பருத்தி சாக்ஸ் மற்றும் கையுறைகளால் மூடினால், மாய்ஸ்சரைசர் இரவு முழுவதும் இருக்கும்.
தண்ணீர் குடிக்காமல் இருக்கிறீர்களா?

கோடை காலத்தில் மட்டுமே டீஹைட்ரேஷனை சமாளிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் குளிர் காலத்திலும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இல்லையெல் சருமம் வறட்சி அடையக்கூடும்.
இதை மறக்காதீங்க:
சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்க முயற்சித்தால், இந்த சீசனில் கட்டாயம் கோடைகால ஸ்கேன் கிளீனிங் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். இதனால் சருமம் அதிக வறட்சி அடையும். எனவே குளிர்காலத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட லேசான க்ளென்சரைப் பயன்படுத்தவும். இதனுடன் வெயிலில் செல்லும் போதும், வீட்டிலேயே இருக்கும் போதும் கூட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள். புறஊதா கதிர்கள் ஒவ்வொரு பருவத்திலும் தோலை சேதப்படுத்துகின்றன.
Image Source: Freepik