Flaxseed Face Mask: முகத்தை மினுமினுக்க வைக்கும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்! எப்படி தயார் செய்வது?

  • SHARE
  • FOLLOW
Flaxseed Face Mask: முகத்தை மினுமினுக்க வைக்கும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்! எப்படி தயார் செய்வது?

அதன் படி, சரும ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவுப் பொருள்களில் ஆளி விதை அமைகிறது. ஆளி விதை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை சருமத்தை ஆழமாக உள்ளிழுத்து ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. இந்த சிறிய விதைகள் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சரும வறட்சியை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது தவிர உணர்திறன் வாய்ந்த சருமத்தை மென்மையாக்குவது முதல் முகப்பருவை எதிர்த்துப் போராடுவது வரை பல்வேறு நன்மைகளை ஆளி விதை வழங்குகிறது. இதில் சருமத்தைப் பொலிவாக்கும் ஆளி விதை ஃபேஸ் மாஸ்க் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Facial Scrub: சரும அழகை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரபை வீட்டிலேயே செய்யலாம்!

சருமத்திற்கு ஆளி விதை ஃபேஸ் மாஸ்க்

சருமத்தைப் பொலிவாக்கவும், அழகாக வைத்திருக்கவும் ஆளி விதை ஃபேஸ் மாஸ்க் பெரிதும் உதவுகிறது. இதில் சருமத்திற்கு பயன்படுத்தக் கூடிய ஆளி விதை ஃபேஸ் மாஸ்க் சிலவற்றைக் காணலாம்.

ஆளிவிதை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

  • ஓட்மீல் - 2 தேக்கரண்டி
  • ஆளிவிதை - 2 தேக்கரண்டி
  • தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • ஆளிவிதைகளை அரைத்து ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து பாத்திரம் ஒன்றில் கலக்க வேண்டும்.
  • இதை முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக தடவலாம்.
  • இதை 10-15 நிமிடங்கள் விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

  • ஆளிவிதை - 1 தேக்கரண்டி
  • கிளிசரின் - 1 தேக்கரண்டி
  • ரோஸ் வாட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை

  • ஆளிவிதையை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

ஆளிவிதை வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

  • ஆளிவிதை - 1 தேக்கரண்டி
  • தயிர் - 1 தேக்கரண்டி
  • வெள்ளரி - 1

செய்முறை

  • முதலில் வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் ஆளிவிதை மற்றும் தயிர் சேர்த்து கலக்க வேண்டும்.
  • பிறகு இதை சருமத்தில் தடவி 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு, சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Glowing Skin: 40 வயதிலும் நீங்க இளமையா தெரியனுமா? அப்போ தினமும் இந்த ஜூஸ் குடியுங்க!

தேன் மற்றும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

  • ஆளிவிதை - 1 தேக்கரண்டி
  • தேன் - 1 தேக்கரண்டி
  • தயிர் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • பாத்திரம் ஒன்றில் ஆளிவிதை தேன் மற்றும் தயிருடன் சேர்த்து கலக்க வேண்டும்.
  • இதை முகத்தில் சமமாகத் தடவ வேண்டும்.
  • அதை 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஆளிவிதை மற்றும் அவகேடோ ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

  • அவகேடோ (வெண்ணெய் பழம்) - 1
  • ஆளி விதை - 1 தேக்கரண்டி
  • தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் அவகேடோ பழத்தை மசித்து அதனுடன் அரைத்த ஆளி விதை மற்றும் தேன் கலக்க வேண்டும்.
  • இதை முகத்தில் சமமாகத் தடவ வேண்டும்.
  • இந்த ஃபேஸ்பேக்கை சருமத்தில் 15-20 நிமிடங்கள் வைத்து, அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

ஆளிவிதை மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்

தேவையானவை

ஆளி விதை - 1 தேக்கரண்டி

தேன் - 1 தேக்கரண்டி

மஞ்சள் - 1 தேக்கரண்டி

செய்முறை

  • முதலில் அரைத்து வைத்த ஆளிவிதையை மஞ்சள் மற்றும் தேனுடன் கலக்க வேண்டும்.
  • இதை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வைக்க வேண்டும்.
  • பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

இவ்வாறு சருமத்திற்கு ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதன் மூலம் சருமத்தை ஈரப்பதமாகவும், சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. எனினும், ஆளி விதை ஒவ்வாமை கொண்டவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: சருமம் ஜொலிஜொலிக்க தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

சருமம் ஜொலிஜொலிக்க தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து யூஸ் பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்