Homemade Facial Scrub: சரும அழகை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரபை வீட்டிலேயே செய்யலாம்!

  • SHARE
  • FOLLOW
Homemade Facial Scrub: சரும அழகை பராமரிக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரபை வீட்டிலேயே செய்யலாம்!


monsoon homemade strawberry scrub : மழைக்காலத்திலும் சரி, வெயில் காலத்திலும் சரி சருமத்தை முறையாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக மழைக்காலத்தில் சருமம் எண்ணைப்பசையுடன் ஒட்டும் தன்மையுடன் காணப்படும். இந்த சமயத்தில் சருமத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றால், முகப்பரு, சரும சுருக்கம் ஆகியவை ஏற்படலாம்.

எனவே, சருமத்தை ஸ்க்ரப் செய்யும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்யப்படும். இதனால் சருமம் பளபளக்கும். சந்தையில் பல வகையான ஸ்க்ரப்கள் உள்ளது. ஆனால், அவை அனைத்தும் கெமிக்களால் ஆனவை. எனவே, இவை உங்கள் சருமத்தை பாதிக்கலாம். உங்கள் முகத்தை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்பினால், ஸ்ட்ராபெர்ரிகளின் உதவியுடன் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வதற்கான எளிய வழிகளைப் பற்றி நாங்கள் கூறுகிறோம்.

இந்த பதிவும் உதவலாம் : Coffee for skin health : காஃபி சருமத்திற்கு நல்லதா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

ஸ்ட்ராபெர்ரி மற்றும் மஞ்சள் ஃபேஸ் ஸ்க்ரப்

மழைக்காலத்தில், உங்கள் சருமத்தை பராமரிக்க ஸ்ட்ராபெர்ரி மற்றும் மஞ்சள் தூள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், மஞ்சள் தூளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம்.

தேவையான பொருட்கள் :

பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 4 பழம்.
பிரவுன் சுகர் - 2 டீஸ்பூன்.
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்.

ஸ்க்ரப் செய்யும் முறை :

  • ஸ்க்ரப் செய்ய, முதலில் ஸ்ட்ராபெர்ரிகளை நன்கு கழுவி, தண்டை நீக்கி வைக்கவும்.
  • இப்போது அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மசிக்கவும்.
  • மசித்த ஸ்ட்ராபெர்ரியில் பிரவுன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இப்போது உங்கள் முகத்தை சுத்தம் செய்து, கண் பகுதியைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் ஸ்க்ரபை தடவவும்.
  • உங்கள் கைகளால் சருமத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • பின்னர், 5 நிமிடங்கள் உலரவைக்கவும்.
  • இறுதியாக குளிர்ந்த நீரின் உதவியுடன் உங்கள் தோலை சுத்தம் செய்யவும்.
  • சருமத்தை சுத்தம் செய்த பிறகு, மாய்ஸ்ட்ரைசர் அப்ளை செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : ஒளிரும் சருமம் வேண்டுமா? இந்த 10 அற்புதமான பழங்களை முயற்சிக்கவும்

ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் ஸ்க்ரப்

மழைக்காலத்தில் உங்கள் சருமம் எண்ணெய் பசையாக மாறினால், ஸ்ட்ராபெரி மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு ஸ்க்ரப் செய்து தடவலாம். இது நல்ல பலன் கொடுக்கும்.

தேவையான பொருட்கள் :

பழுத்த ஸ்ட்ராபெர்ரி - 6 பழம்.
பிரவுன் சுகர் - 1 ஸ்பூன்.
தேன் - 1 டீஸ்பூன்.
அரை எலுமிச்சை சாறு.

ஸ்க்ரப் செய்யும் முறை :

  • இந்த ஸ்க்ரப் தயாரிக்க, முதலில் ஸ்ட்ராபெர்ரிகளை நன்கு சுத்தம் செய்யவும்.
  • இப்போது ஸ்ட்ராபெர்ரியின் தண்டுகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக மசிக்கவும்.
  • மசித்த ஸ்ட்ராபெர்ரியுடன் பிரவுன் சுகர் சேர்த்து கலக்கவும்.
  • இப்போது இதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • உங்கள் சருமத்தை சுத்தம் செய்து, முறையாக செய்த இந்த ஸ்க்ரபை முகத்தில் தடவவும்.
  • உங்கள் கைகளால் சருமத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர், 5 நிமிடம் அப்படியே விடவும்.
  • 5 நிமிடம் கழித்து தண்ணீர் வைத்து உங்கள் சருமத்தை சுத்தம் செய்து, மாய்ஸ்ட்ரைசர் தடவவும்.

Image Source: Freepik

Read Next

Dark Circles Remedy: இந்த ஆயில் ஒன்னு போதும்! கருவளையம் இருக்குற இடம் தெரியாம மறைஞ்சிடும்

Disclaimer