$
Triphala And Honey Face Mask: பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாகும். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவற்றால் பல்வேறு சரும பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் சருமத்தில் எரிச்சல், அரிப்பு, வறண்டு போகுதல் போன்றவை அடங்கும். இதனைத் தவிர்க்க சந்தையில் கிடைக்கும் சில பராமரிப்பு பொருள்களை வாங்கி பயன்படுத்துவர். ஆனால், இதில் இரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
இந்த பக்கவிளைவுகளிலிருந்து விடுபட சில இயற்கையான முறைகளைக் கையாள்வது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. அதன் படி, திரிபலா மற்றும் தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் திரிபலா மற்றும் தேன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஃபேஸ் மாஸ்க் குறித்தும், இவை இரண்டும் சருமத்திற்கு தரும் நன்மைகள் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Honey on Face: குளிர்காலத்தில் முகத்திற்கு தேன் தடவுவது எவ்வளவு நல்லது தெரியுமா?
சருமத்திற்கு தேன் தரும் நன்மைகள்
சரும பராமரிப்பைப் பொறுத்த வரையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகச் செயல்படுகிறது. இவை சருமத்தை ஈரப்பதத்தைத் தக்க வைத்து, நீரேற்றமாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தவும், சருமத்தில் ஏற்படும் பல்வேறு நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும் தேன் சிறந்த தேர்வாக அமைகிறது.
தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், முதுமையாவதை மெதுவாக்கவும் உதவுகிறது. மேலும் சருமத்திற்கு தேன் பயன்படுத்துவது எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. தேனில் உள்ள என்சைம்கள் ஆழமாக ஈரப்பதமாக்கி மென்மையாக்குகிறது. இது சருமத் துளைகளைச் சுத்தப்படுத்தி, சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளைப் போக்க உதவுகிறது. இது தவிர, சருமத்தில் தழும்புகளை ஒளிரச் செய்யவும், சேதமடைந்த சருமத்தை சரி செய்யும் தன்மையையும் கொண்டுள்ளது.

சருமத்திற்கு திரிபலா தரும் நன்மைகள்
பொதுவாக திரிபலா என்பது மூன்று மூலிகைகளான தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய் போன்ற மூன்று பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சிறந்த ஆயுர்வேத கலவையாகும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும பாதுகாப்புக்கு உதவுகிறது. மேலும் திரிபலாவில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தைத் துடைக்கும் திறன், சருமத்திற்குத் தேவையான கொலாஜன் போன்ற புரதங்களை உருவாக்க உதவுகிறது. மேலும், இது சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்குகிறது.
- திரிபலாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சரும சேதத்தை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அழிக்கவும், முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கவும் உதவுகிறது.
- திரிபலா ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. எனவே இது சருமத்தின் துளைகளில் உள்ள மாசுக்களை வெளியேற்றி சருமத்தை பிரகாசமாக மற்றும் தெளிவாக வைக்க உதவுகிறது.
- இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்தி, முகப்பருவுக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது.
- சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் திறனை திரிபலா கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Honey Benefits For Skin: சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்திற்கு தேன் மற்றும் திரிபலா ஃபேஸ் மாஸ்க்
திரிபலா மற்றும் தேன் இவை இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவது சருமத்திலிருந்து நச்சுக்களை நீக்கி, நீரேற்றம் செய்து பிரகாசமாக வைக்க உதவுகிறது. இதில் திரிபலா தேன் ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.
தேவையானவை
- திரிபலா பவுடர் - 1 தேக்கரண்டி
- பச்சைத் தேன் - 1 தேக்கரண்டி
- ரோஸ் வாட்டர் - சில சொட்டுகள் (விரும்பினால்)

திரிபலா தேன் ஃபேஸ் மாஸ்க் தயார் செய்யும் முறை
- ஒரு சிறிய கிண்ணம் ஒன்றில் பச்சை தேன் மற்றும் திரிபலா பவுடர் போன்றவற்றைக் கலந்து மென்மையான பேஸ்ட் ஆகும் வரை கலக்க வேண்டும்.
- இதில் விரும்பினால் திரவ நிலைத்தன்மையைப் பெற சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்க்க வேண்டும்.
- இந்த திரிபலா தேன் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். கண்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். பிறகு சருமத்தை உலர வைக்கலாம்.
சிறந்த முடிவுகளைப் பெற திரிபலா தேன் ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒன்று முதல் இருமுறை பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் ஆனது வறண்ட சருமத்திற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. இது வறண்ட சருமத்தில் வறட்சியைப் போக்கவும், பளபளப்பான சருமத்தைத் தரவும் உதவுகிறது. இது சருமத்தை நீரேற்றமாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.
இது போன்ற முறையில் திரிபலாவுடன் தேன் கலந்து ஃபேஸ் மாஸ்க் தயார் செய்வது சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: எப்பவும் அழகா இளமையா தெரியனுமா? இந்த 2 பொருட்களை முகத்தில் தடவுங்க!
Image Source: Freepik