Homemade honey face pack for glowing skin: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள் பலருக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தருகிறது. இதில் சரும பராமரிப்பும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் காலநிலை மாற்றங்களின் காரணமாக சரும ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சருமத்தில் வறட்சி, எரிச்சல், அரிப்பு, உலர்ந்த சருமம் உள்ளிட்ட நிறைய சரும பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
இதனைத் தவிர்க்க, சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், வீட்டிலேயே சில இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தி சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். ஏனெனில், இயற்கை பொருள்களைப் பயன்படுத்துவது நிலையானதாக அமையும். எனினும், சருமத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றில் எந்த வகையான சருமத்திற்கு என்ன மாதிரியான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் எழும். இதில் எண்ணெய் சருமத்திற்கு இயற்கை பொருளான தேனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சருமம் ஜொலிஜொலிக்க தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து யூஸ் பண்ணுங்க
எண்ணெய் பசை சருமத்திற்கு தேன்
பொதுவாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கரும்புள்ளிகள், முகப்பரு, துளைகள் அடைப்பு போன்றவை எளிதில் உருவாகலாம். இது அழுக்கு மற்றும் பாக்டீரியாக்களை ஈர்த்து, கூடுதல் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதற்கு சிறந்த தேர்வாக தேன் உதவுகிறது. இதற்கு தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவையே காரணமாகும். சருமத்திற்கு தேன் பயன்படுத்துவது முகப்பருவைக் குறைக்கவும், எண்ணெய் உற்பத்தியை சீராக்கவும் மற்றும் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
சருமத்திற்கு தேன் ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை
தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
தயிருடன் தேன் கலந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை குளிர்விக்கவும், நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது.
தேவையானவை
- தேன் - 1 தேக்கரண்டி
- வெற்று தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை
- ஒரு சிறிய கிண்ணம் ஒன்றில், தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இந்தக் கலவையைக் கண் பகுதியைத் தவிர்த்து, முகத்தின் மற்ற பகுதிகளில் சமமாக தடவ வேண்டும்.
- பின் இதை 15-20 நிமிடங்கள் அல்லது அதை உலரும் வரும் வரை வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும்.
- அதன் பிறகு சுத்தமான துண்டின் உதவியுடன் முகத்தை மெதுவாக உலர வைக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Pigmentation Removal Tips: முகத்தில் கருந்திட்டுகள் அதிகமா இருக்கா? இந்த ஒரு பொருள் போதும்
தேன் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை தயிரைப் போலவே குளிர்ச்சிமிக்கதாகும். இவை சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
தேவையானவை
- தேன் - 1 தேக்கரண்டி
- புதிய கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
செய்முறை
- சிறிய கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலக்க வேண்டும்.
- கண் பகுதியைத் தவிர்த்து, முகத்தின் மற்ற பகுதிகளில் இந்தக் கலவையைத் தடவ வேண்டும்.
- இதை முகத்தில் உலரும் வரை வைத்து அல்லது 15-20 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
- அதன் பின், சுத்தமான துண்டு பயன்படுத்தி சருமத்தை மெதுவாக உலர வைக்கலாம்.

தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் மாஸ்க்
இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சருமத்தை ஆற்றவும், இறந்த சரும செல்களை நீக்கவும் உதவுகிறது.
தேவையானவை
- தேன் 1 தேக்கரண்டி
- ஓட்மீல் - 1/4 கப் (அரைத்தது)
- சூடான நீர் - 1 தேக்கரண்டி
செய்முறை
- தேன், ஓட்ஸ் மற்றும் வெதுவெதுப்பான நீர் போன்றவற்றை ஒரு சிறிய கிண்ணம் ஒன்றில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இதைக் கண் பகுதியைத் தவிர்த்து, சுத்தமான, ஈரமான முகத்தில் இந்த ஃபேஸ் மாஸ்க்கை மெதுவாகப் பயன்படுத்த வேண்டும்.
- இதை சருமத்தில் வட்ட இயக்கத்தில் சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
- இந்த ஃபேஸ் மாஸ்க்கை 10-15 நிமிடங்கள் அல்லது அது முழுமையாக உலரும் வரை வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- பின் சுத்தமான துண்டு கொண்டு, முகத்தை உலர வைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Face Mask: முகத்தை மினுமினுக்க வைக்கும் ஆளிவிதை ஃபேஸ் மாஸ்க்! எப்படி தயார் செய்வது?
தேன் மற்றும் சர்க்கரை ஃபேஸ் மாஸ்க்
தேன், சர்க்கரை கலந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
தேவையானவை
- தேன் - 2 தேக்கரண்டி
- தானிய சர்க்கரை - 1/4 கப்
- ஆலிவ் எண்ணெய் (அல்லது மற்றொரு கேரியர் எண்ணெய்) - 1 தேக்கரண்டி
செய்முறை
- இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய, சர்க்கரை, தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் மூன்றையும் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து கலக்க வேண்டும்.
- பின், இதை ஈரமான தோலில் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, முகம், கழுத்து மற்றும் கைகள் போன்ற உரித்தல் தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்தலாம்.
- பிறகு இந்த ஸ்க்ரப்பை வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- அதன் பின், சுத்தமான துண்டு கொண்டு, சருமத்தை மெதுவாக உலர வைக்கலாம்.

இவ்வாறு சருமத்திற்கு தேனுடன் மற்ற சரும பராமரிப்புப் பொருள்களைச் சேர்த்து ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவது சருமத்தைப் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. எனினும், ஒவ்வாமை பிரச்சனையைத் தவிர்க்க, இதைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க
Image Source: Freepik