Ways To Use Rice Flour For Pigmentation: முகத்தில் ஒரு சில இடங்களில் நிறத்திட்டுகள் தோன்றி, முகத்தின் அழகைக் கெடுக்கும். நவீன காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, மாசுபாடு, தூசி, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிறமிகள் தோன்றலாம். இதில், சருமத்தில் புள்ளிகள் தோன்றுவது பிக்மென்டேஷன் எனக் கூறப்படுகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷன் எனவும் அழைக்கப்படுகிறது. இவை எளிதில் மறையாது. எனினும், ஒளிரும் மற்றும் களங்கமற்ற சருமத்தைப் பெறவே அனைவரும் விரும்புவர்.
எனவே, இந்த நிறமிகளை அகற்ற பல வகையான தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த தயாரிப்பில் இரசாயனங்கள் கலந்திருக்கலாம் அல்லது விலை உயர்ந்தவகையாக இருக்கலாம். சில நேரங்களில் இவை விரும்பிய முடிவுகளைத் தருவதில்லை. இந்த சூழ்நிலையில் நாம் வீட்டு வைத்திய முறையைக் கையாள்வது நல்லது. அதன் படி, இந்த கரும்புள்ளிகளை நீக்க அரிசி மாவில் செய்யப்பட்ட முகமூடி பயன்படுத்தப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Upper Lip Hair: உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க சில வீட்டு வைத்திய முறைகள்
அரிசி மாவின் ஊட்டச்சத்துகள்
அரிசி மாவு சருமத்திற்கு பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. மேலும் இது தோல் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டிமைக்ரோபியல் போன்றவையே காரணம். இவை சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும், முதுமை அறிகுறிகளைக் குறைக்கவும், நிறமிகலை நீக்கவும் உதவுகிறது. மேலும், இது சருமத்தை உட்புறமாக வெளியேற்றுகிறது. இதில், நிறமிகளை நீக்க அரிசி மாவு எவ்வாவு பயன்படுகிறது என்பதைக் காண்போம்.
நிறமிகளை நீக்க அரிசி மாவு பயன்படுத்தும் முறை (How To Use Rice Flour For Pigmentation)
முகத்தில் உள்ள நிறமிகளை நீக்கி முகத்தைப் பிரகாசமாக வைத்திருக்க, அரிசி மாவுடன் சில கூடுதல் பொருள்களைப் பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்யலாம்.
அரிசி மாவு மற்றும் தக்காளி மாஸ்க் (Rice Flour Tomato Face Pack)
தேவையானவை
- அரிசி மாவு – 1 தேக்கரண்டி
- தக்காளி சாறு – 3 தேக்கரண்டி
- கோதுமை மாவு – 1 தேக்கரண்டி
அரிசி மாவு தக்காளி ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி
- அரிசி மாவு, கோதுமை மாவு, தக்காளி சாறு மூன்றையும் கலந்து கெட்டியான பேஸ்ட்டாக தயாரிக்கவும்.
- இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் 20 நிமிடங்கள் தடவி வைக்க வேண்டும். பிறகு, முகத்தை தண்ணீரில் கழுவி விடலாம்.
- இந்த மாஸ்க் ஆனது நிறமியைக் குறைப்பதுடன் கருவளையங்களைக் குறைக்கிறது. மேலும், இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!
அரிசி மாவு மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க் (Rice Flour And Aloe Vera Face Mask)
தேவையானவை
- அரிசி மாவு – 2 தேக்கரண்டி
- கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
அரிசி மாவு கற்றாழை ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி
- இந்த இரண்டு பொருள்களையும் கலந்து கலவையைத் தயார் செய்ய வேண்டும்.
- பின் இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.
- பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி வர நிறமி குறைந்து, சருமத்தை பளபளப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவும்.

அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஃபேஸ் மாஸ்க் (Rice Flour Gram Flour Face Pack)
தேவையானவை
- அரிசி மாவு – 1 தேக்கரண்டி
- உளுந்து மாவு – 1 ஸ்பூன்
- கிரீம் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் – ¼ தேக்கரண்டி
அரிசி மாவு மற்றும் உளுந்து மாவு ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி
- இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க, மேலே கூறப்பட்ட பொருள்களைக் கலந்து கலவையை தயார் செய்ய வேண்டும்.
- பின் இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- அதன் பிறகு முகத்தை தண்ணீரில் கழுவிக் கொள்ளலாம்.
- மாஸ்க் சருமத்தை உள்ளிருந்து பளபளப்பாக வைப்பதுடன், நிறமிகளை நீக்க உதவுகிறது.
இந்த வகை ஃபேஸ் மாக்குகள் முகத்தில் உள்ள கருந்திட்டுகளை நீக்கி பளபளப்பாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது. எனினும், இந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!
Image Source: Freepik