Doctor Verified

அரிசி மாவை முகத்தில் தடவினால் ஏற்படும் பக்கவிளைவுகள் – நிபுணர் எச்சரிக்கை..

அரிசி மாவு சருமத்திற்கு நன்மை தருவதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதிகமாகப் பயன்படுத்தினால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும்? உலர் சருமம், ஒவ்வாமை, முகப்பரு உள்ளிட்ட பிரச்சனைகளை மருத்துவர் விளக்கம் இங்கே.
  • SHARE
  • FOLLOW
அரிசி மாவை முகத்தில் தடவினால் ஏற்படும் பக்கவிளைவுகள் – நிபுணர் எச்சரிக்கை..


அரிசி பல நூற்றாண்டுகளாக இந்தியர்களின் உணவில் மட்டுமின்றி அழகுப் பராமரிப்பிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக அரிசி மாவு (Rice Flour), ஃபேஸ் பேக் (Face Pack), ஸ்க்ரப் (Scrub) மற்றும் கிளென்சர் (Cleanser) ஆகப் பயன்படுத்தப்படுகிறது. பலர் இதன் மூலம் முகம் பளபளப்பாகும் என்றும், கரும்புள்ளிகள் குறையும் என்றும் நம்புகிறார்கள்.

ஆனால், ஜெய்ப்பூர் பாபு நகரில் உள்ள இயற்கை மருத்துவமனையின் யோகா மற்றும் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் கிரண் குப்தா, “அரிசி மாவு நன்மை தரும், ஆனால் தவறான முறையிலும் அதிகமாகவும் பயன்படுத்தினால் அது சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும்” என எச்சரிக்கிறார்.

artical  - 2025-09-13T170047.361

அரிசி மாவின் பக்கவிளைவுகள்

சரும வறட்சி

அரிசி மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டர் ஆக செயல்படும். ஆனால் அதை அடிக்கடி முகத்தில் தேய்த்தால், சருமத்தின் இயற்கையான ஈரப்பதம் நீங்கிவிடும். இதனால் சருமம் வறண்டு, சுரண்டல் ஏற்படும். ஆகையால் வறண்ட சருமம் உள்ளவர்கள், அரிசி மாவைத் தேன், பால் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வாமை அல்லது தடிப்புகள்

சிலருக்கு அரிசி மாவால் அரிப்பு, சிவத்தல், தடிப்பு (Rashes) போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.

தோல் நிறத்தில் மாற்றம்

அரிசி மாவு அதிகமாகப் பயன்படுத்தினால், அது சருமத்தின் மேலடுக்கு சேதமடைந்து, இயற்கையான நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தும். குறிப்பாக அடிக்கடி ஸ்க்ரப் செய்வதால் முகம் சீராகத் தெரியாமல் போகும்.

இந்த பதிவும் உதவலாம்: முகம் பளிச்சென்று இருக்க.. கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க..

முகப்பரு பிரச்சனை

அரிசி மாவு பயன்படுத்திய பிறகு சருமம் சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், துளைகள் அடைப்பு (Clogged Pores) ஏற்படும். இதன் விளைவாக முகப்பரு, கரும்புள்ளிகள் (Blackheads), வெள்ளைப் புள்ளிகள் (Whiteheads) தோன்றும் அபாயம் உள்ளது.

முன்கூட்டிய வயதான அறிகுறிகள்

அரிசி மாவை அடிக்கடி வலுவாக முகத்தில் தேய்த்தால், சரும வறட்சி ஏற்பட்டு, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் (Fine Lines) மிக விரைவில் தோன்றும். இதனால் முன்கூட்டிய வயதான தோற்றம் (Premature Ageing) உண்டாகும்.

artical  - 2025-09-13T170153.363

நிபுணர் பரிந்துரை

* அரிசி மாவை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை மட்டுமே பயன்படுத்தவும்.

* உலர் சருமம் (Dry Skin) கொண்டவர்கள் அரிசி மாவை தனியாகப் பயன்படுத்தாமல், ஈரப்பதம் தரும் பொருட்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

* அரிசி மாவு பயன்படுத்திய பிறகு முகத்தை சுத்தமாகக் கழுவி, மாய்ஸ்சரைசர் தடவுவது அவசியம்.

* ஒவ்வாமை, சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தி மருத்துவரை அணுகவும்.

இறுதியாக..

அரிசி மாவு சருமத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு இயற்கை வைத்தியம் தான். ஆனால் அதனை அதிகமாகவும் தவறான முறையிலும் பயன்படுத்தினால் தீமைகள் அதிகம். முகத்தில் ஒவ்வாமை, வறட்சி, முகப்பரு, தோல் நிறத்தில் மாற்றம், முன்கூட்டிய சுருக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, அரிசி மாவைப் பயன்படுத்த விரும்பினால், அளவோடு மற்றும் சரியான முறையிலேயே பயன்படுத்துங்கள்.

{Disclaimer: இந்தக் கட்டுரை தகவலறிதலுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. உங்களுக்குச் சரும பிரச்சனைகள் இருந்தால், சரும நிபுணரை (Dermatologist) அணுகுவது அவசியம்.}

Read Next

என்ன செய்தாலும் முகப்பரு போகவில்லையா? அதற்கான காரணங்கள் இதோ.. முகப்பருவைத் தடுக்க மருத்துவர் தரும் டிப்ஸ்

Disclaimer

குறிச்சொற்கள்