Brown Rice Side Effects: பழுப்பு அரிசி நல்லது தான்! ஆனா இந்த பிரச்சனைகளையும் தரும்

  • SHARE
  • FOLLOW
Brown Rice Side Effects: பழுப்பு அரிசி நல்லது தான்! ஆனா இந்த பிரச்சனைகளையும் தரும்


இதில் பெரும்பாலும் நம் வீடுகளில் வெள்ளை மற்றும் பழுப்பு நிற அரிசி உட்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பழுப்பு அரிசி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது உடல் கொழுப்பைக் குறைக்க, நீரிழிவு நோய் மற்றும் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க பழுப்பு அரிசி உதவுகிறது. எனினும், இது ஒரு பெரிய அளவிலான பக்கவிளைவைக் கொண்டுள்ளது. அதாவது, நீண்ட காலத்திற்கு இந்த பழுப்பு அரிசி உட்கொள்ளல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். இதற்கு இதில் காணப்படும் பைடிக் ஆசிட் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: Clay Pot Cooking: மண்பானை உணவுக்கு தனி ருசி மட்டுமல்ல! இந்த சூப்பரான நன்மைகளும் இருக்கு

பைடிக் ஆசிட் என்றால் என்ன?

பைடிக் அமிலம் என்பது ஆன்டி-நியூட்ரியண்ட் ஆகும். இது பழுப்பு அரிசியில் அதிகளவு உள்ளது. தாவர விதைகளில் காணப்படும் இயற்கையான ஊட்டச்சத்து எதிர்ப்பு கலவையே பைடிக் அமிலம் எனப்படுகிறது. இது பல்வேறு தாவர திசுக்களில் குறிப்பாக தானியங்கள் மற்றும் விதைகளில் பாஸ்பரஸின் முதன்மை சேமிப்பு வடிவமாக செயல்படுகிறது. இந்த பைடிக் அமிலத்தில் சில நன்மை பயக்கும் பண்புகள் இருப்பினும், இதில் மனித ஊட்டச்சத்தை பாதிக்கும் பண்புகளும் நிறைந்துள்ளது.

ஏன் பைடிக் அமிலம் தீங்கானது?

இது இயற்கையான ஊட்டச்சத்து எதிர்ப்பு கலவையாக இருப்பதால் தாதுக்கள் அதிலும் குறிப்பாக துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உடலில் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியின் பைடிக் அமிலம் ஒட்டுமொத்த செரிமானத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரிய செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

பழுப்பு அரிசி உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள்

செரிமான பிரச்சனைகள்

பழுப்பு அரிசியில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சிலருக்கு செரிமான ஆரோக்கியத்தை ஏற்படுத்தலாம். மேலும், இது வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகளை ஏற்படுத்தும். இது தவிர பழுப்பு அரிசியில் புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள், பாலியோல்கள் (FODMAPs), டிசாக்கரைடுகள் போன்றவை உள்ளது. இந்த கலவைகள் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சனைகளை தீவிரமாக்கலாம்.

ஆர்சனிக்

வெள்ளை அரிசியுடன் ஒப்பிடுகையில், பழுப்பு அரிசி அதிக அளவு கனிம ஆர்சனிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அதிக அளவிலான கனிம ஆர்சனிக்கின் நீண்டகால நுகர்வு, இதய நோய், புற்றுநோய் உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: உயிரைக்குடிக்கும் கள்ளச்சாராயம்! மெத்தனால் விஷத்தின் முதலுதவி, சிகிச்சை முறை!

மற்ற கன உலோகங்கள்

பழுப்பு அரிசியானது மண்ணிலிருந்து ஆர்சனிக் தவிர, ஈயம் மற்றும் காட்மியம் போன்ற பிற கன உலோகங்களையும் குவிக்கிறது. இவை பல்வேறு பாதகமான ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அரிசி ஒவ்வாமை

சிலர் அரிசி ஒவ்வாமை பிரச்சனையைக் கொண்டிருப்பர். இதனால் அரிப்பு, சொறி அல்லது கடுமையான ஒவ்வாமை எதிர்வினைகள் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படலாம்.

பழுப்பு அரிசியின் விளைவுகளைத் தவிர்க்க என்ன செய்வது?

பழுப்பு அரிசியை சமைப்பதற்கு முன்னதாக, அதை அதிக வெப்பநிலையில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சில இயற்கையான பைட்டேட்டுகள் அகற்றப்படுகிறது. இவ்வாறு ஊறவைத்த அல்லது முளைத்த பழுப்பு அரிசியை சமைக்கும் போது, அதில் பைடிக் அமிலம் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பழுப்பு அரிசி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், இந்த அரிசியை உட்கொள்ளும் முன்னதாக இது போன்ற விளைவுகளைத் தெரிந்து கொண்டு அதைத் தவிர்க்கும் முறைகளைக் கையாள்வதும் அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Ghee For Healing Wound: உடல் மற்றும் மன காயங்களுக்கு சிறந்த தீர்வு தரும் நெய்! எப்படி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Clay Pot Cooking: மண்பானை உணவுக்கு தனி ருசி மட்டுமல்ல! இந்த சூப்பரான நன்மைகளும் இருக்கு

Disclaimer

குறிச்சொற்கள்