Expert

Oily Skin Face Pack: உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா? அப்போ இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்க!

  • SHARE
  • FOLLOW
Oily Skin Face Pack: உங்களுக்கு ஆயில் ஸ்கின்னா? அப்போ இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்க!

எண்ணெய் பசை காரணமாக சருமத்தில் பருக்கள் மற்றும் தழும்புகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்நிலையில், எண்ணெய் சருமத்திற்கு கோடையில் சிறப்பு கவனிப்பு தேவை. இதற்கு, இந்த சிறப்பு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவும். இதனால், அதிகப்படியான எண்ணெய் குறைவது மட்டுமின்றி, சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளும் நீங்கும். வாருங்கள், இந்த ஃபேஸ் பேக்கை எவ்வாறு தயாரிப்பது மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை பற்றி இங்க பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Acne Diet: உங்களுக்கு முகப்பரு இருக்கா? மறந்தும் இந்த உணவுங்களை சாப்பிடாதீங்க!!

ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்கின் நன்மைகள்

  • ஓட்ஸ் சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வெளிப்புற அழுக்குகளிலிருந்து பாதுகாக்கிறது.
  • தேன் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.
  • ஓட்ஸ் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கூடுதல் எண்ணெயை நீக்கி சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. இது துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் நீக்குகிறது.
  • ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனால் சருமத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
  • இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து முகப்பருவை நீக்குகிறது.
  • அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தேனில் காணப்படுகின்றன. இது சருமத்தை தளர்த்தும்.
  • இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகள் காரணமாக, சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்தி பருக்களை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Mango Face Mask: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்க மேங்கோ ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

ஆயில் ஸ்கின் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 டீஸ்பூன்.
தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

  • முதலில் 2-3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • இப்போது அதை அரைத்து பேஸ்ட் செய்யவும்.
  • அதில் 1 ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • இப்போது அதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும்.
  • இதை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
  • பின்னர் முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவவும்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவவும்.

இந்த பதிவும் உதவலாம் : Amla Powder For Skin: குறைந்த நேரத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் ஆம்லா பவுடர்! இப்படி யூஸ் பண்ணி பாருங்க

இவை இரண்டும் முற்றிலும் இயற்கையானவை என்றாலும். ஆனால், முகத்தில் எதையாவது தடவுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

Mango Face Mask: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்க மேங்கோ ஃபேஸ் பேக் யூஸ் பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்