Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Clear Skin Tips: கொளுத்தும் வெயிலில் இருந்து உங்க சருமத்தை பாதுகாக்க இந்த ஸ்பெஷல் ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்க!

Face pack for spotless and glowing skin in summer: ஆண், பெண் என அனைவரும் குறைகள் இல்லாத ஆரோக்கியமான சருமத்தை பெறவே ஆசைப்படுகிறார்கள். ஆனால், அப்படி மாசு மரு இல்லாத சருமத்தை பெறுவது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. குடிப்பாக கோடை காலத்தில். நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடல் சூடாக்கி பருக்கள் அதிகரிக்க துவங்குகிறது.

சரும பராமரிப்பு குறித்து பேசும் போதெல்லாம், நாம் அனைவரும் விலையுயர்ந்த தோல் பராமரிப்பு பொருட்கள் தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், வீட்டில் இருக்கும் பொருட்கள் சருமத்தை பராமரிக்க மிகவும் நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இது முகத்திற்கு பொலிவைத் தருவதோடு, புள்ளிகள் மற்றும் தழும்புகளையும் நீக்குகிறது.

சருமத்திற்கு மிகவும் நல்லது மற்றும் பண்புகள் நிறைந்த பல விஷயங்கள் நம் சமையலறையில் உள்ளன. நம் வீடுகளில் பல தலைமுறைகளாக தோல் பராமரிப்பில் இந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய 2 விஷயங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அவற்றைக் கலந்து நீங்கள் எளிதாக ஃபேஸ் பேக் தயார் செய்து கோடையில் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Turmeric Face Pack: சருமத்தை பொலிவாக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்! இந்த பொருள்களோட சேர்த்து யூஸ் பண்ணுங்க

கடலை மாவு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

கற்றாழை ஜெல்லில் கடலை மாவு கலந்து தடவினால் சருமம் சீராகும். உங்கள் சருமம் மந்தமாகவோ, பளபளப்பாகவோ அல்லது தோலில் புள்ளிகள் இருந்தாலோ, இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கடலை மாவு இயற்கையான ஸ்க்ரப்பாக செயல்படுகிறது. இது முகத்தை பொலிவாக்குவதுடன் முகப்பருவையும் நீக்குகிறது.

கடலை மாவில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது.

இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, கூடுதல் எண்ணெய் நீக்குகிறது மற்றும் முகத்தை மென்மையாக்குகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகள் கற்றாழையில் உள்ளன.

இது முதுமையின் அறிகுறிகளை குறைத்து முகத்திற்கு பொலிவை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Rice Water: உடைந்தது Korean Beauty Secret.. அரிசி நீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!

ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

உளுந்து மாவு - 2 ஸ்பூன்.
கற்றாழை - 2 டீஸ்பூன்.
ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

  • ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
  • இது பேஸ்ட் ஆகும் வரை நன்கு கலக்கவும்.
  • இப்போது முறையாக தயார் செய்து வைத்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
  • அரை மணி நேரம் கழித்து முகத்தை நன்றாகக் கழுவவும்.
  • சில நாட்களில் வித்தியாசத்தைக் காணலாம்.

குறிப்பு: இவை இரண்டும் முற்றிலும் இயற்கையானவை என்றாலும். ஆனால், முகத்தில் எதையாவது தடவுவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். இதை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Pineapple For Glowing Skin: வெயில் காலத்திலும் உங்க முகம் பளபளப்பாக அன்னாசி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!

இவற்றையும் பயன்படுத்தலாம்:

வாழைப்பழம் மற்றும் தேன் ஃபேஸ் பேக்: பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் தேன் கலந்து கொள்ளவும். கலவையை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விடவும். பின் தண்ணீரில் கழுவவும்.

மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் மற்றும் பால் கலந்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர விடவும். பின்னர் குளிர்ந்த தண்ணீர் கொண்டு கழுவவும்.

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்: கற்றாழை ஜெல் மற்றும் வெள்ளரி சாறு கலந்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டு கழுவி விடவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Amla Benefits: உச்சந்தலை, சருமம் முதல் மொத்த ஆரோக்கியத்திற்கும் இது வரப்பிரசாதம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content