$
Honey Skin Care Benefits: சரும பராமரிப்பிற்கு இயற்கையான பொருளாக தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. தேனில் உள்ள மருத்துவ குணங்கள், சருமத்திற்கு ஊட்டமளித்து பிரகாசமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. தேனில் என்சைம்கள், ஊட்டச்சத்துகள் மற்றும் மற்றும் நன்மை பயக்கும் சேர்மங்கள் போன்றவை உள்ளன. அதன் படி, தேன் சருமத்திற்கு பல்வேறு முக்கிய நன்மைகளைத் தருகிறது.
தேன் சருமத்திற்கு ஏன் நல்லது?
சருமத்திற்கு தேன் பயன்படுத்துவது மிகுந்த நன்மை பயக்கும். இதில் உள்ள குணப்படுத்தும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளே காரணம் ஆகும். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் திறனைத் தேன் கொண்டுள்ளது. இது தவிர, சருமத்திற்கு தேன் தரும் ஆரோக்கிய நன்மைகள் பல்வேறு உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.

சருமத்திற்கு தேன் தரும் ஆரோக்கிய நன்மைகள்
தேனில் உள்ள ஆரோக்கிய பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், தேன் சருமத்திற்கு நல்லது என்பதை உறுதிப்படுத்த உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Natural Hair Oil: முடி கொட்டும் கவலை இனி வேண்டாம்.. இயற்கை முறை தீர்வு இதோ!
இயற்கை ஈரப்பதம்
தேன் ஒரு இயற்கையான ஈரப்பதம் தரக்கூடிய பொருளாகும். மேலும், இது மாய்ஸ்சரைசராகவும் பயன்படுகிறது. இது ஈரப்பதத்தை சருமத்தின் ஆழம் வரை இழுத்து வறண்ட சருமத்திற்கு உதவுகிறது. மேலும் இவை முன்கூட்டியே வயதான அறிகுறிகளைத் தேன் குறைக்கிறது. இவை சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நன்மை தரும் ஊட்டச்சத்துகள்
தேனில் பல்வேறு வித ஊட்டச்சத்துகளான அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை உள்ளன. இவை உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்
தேனில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்திற்கு பல்வேறு பயன்பாடுகளைத் தருகிறது. தேன் இயற்கை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொன்டிருப்பதால், சருமத்தில் உள்ள துளைகளை அடைத்து தோல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இவை சருமத்தில் ஏற்படும் தோலழற்சி, தோல் தடிப்பு உள்ளிட்ட பல்வேறு தோல் அழற்சி நிலைகளுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Hair Growth Remedy : ஒரே மாதத்தில் முடி இடுப்புவரை நீளமாக வளர இதை செய்தால் போதும்!
காயங்களைக் குணப்படுத்த
தேன் சருமத்தில் செல்லுலார் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. மனுகா தேனின் தனித்துவமான திறன், முகத்தில் ஏற்படும் காயங்கள் மற்றும் தீக்காயங்களுக்கு மருத்துவ நிபுணர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவை வாயின் உதட்டில் ஏற்படும் வெடிப்பை நீக்க சிறந்த தேர்வாக அமைகிறது.
வெயிலின் தாக்கத்தைக் குறைக்க
தேன் சேதமடைந்த திசுக்கள் குணப்படுத்துதலை ஊக்குவிக்கிறது. மேலும் இவை சருமத்தில் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்கிறது. தேனின் இயற்கையான ஈரப்பதம் சருமத்தை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. வெயில் தாக்கத்தினால் ஏற்படும் சரும பிரச்சனைகளிலிருந்தும் விடுபட தேன் உதவுகிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்
தேனில் சக்தி வாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!
Image Source: Freepik