$
How To Make Flaxseed Gel For Hair Growth: இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. ஆனால், உங்களுக்குத் தெரியுமா? இவை நம் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அவ்வாறே முடி சார்ந்த பிரச்சனைகளாக தலைமுடி வறண்டு போகுதல், முடி வறட்சி மற்றும் அரிப்பு, எரிச்சல், முடி உடைதல், முடி மெலிதாகுதல் மற்றும் இன்னும் வேறு சில பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
இதற்கு முக்கியமான ஒன்றாக அமைவது போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாததே ஆகும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்க சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை சில சமயங்களில் இரசாயனம் கலந்ததாக அமையலாம். இதற்கு சிறந்த தீர்வாக இயற்கை முறைகளைக் கையாளலாம். அதன் படி, முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், பல்வேறு முடி சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஆளி விதைகள் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க
முடி வளர்ச்சியில் ஆளி விதையின் பங்கு
ஆளி விதைகள் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த ஆதாரமாகும். மேலும், இந்த வைட்டமின் ஈ முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆளி விதைகளில் நிறைந்துள்ள வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடி வளர்ச்சியை பெரிதும் ஆதரிக்கிறது. மேலும் முடி மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, இதன் வைட்டமின் ஈ ஆக்ஸிஜனேற்ற அழுத்த பண்புகள், முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. இது தவிர, ஆளி விதையில் வைட்டமின் பி சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. இவை முடியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், முடி வளர்ச்சிக்கு உதவக்கூடிய பாலி அன்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்களும் இந்த ஆளி விதைகளில் நிறைந்து காணப்படுகிறது.

முடி வளர்ச்சிக்கு ஆளி விதை ஜெல் தயாரிக்கும் முறை
முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கவும், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும் ஆளி விதை ஜெல் தயார் செய்யப்படுகிறது.
தேவையானவை
- ஆளி விதைகள் – 1 கப்
- நீர் – 2 கப்
இந்த பதிவும் உதவலாம்: Sesame Seeds Hair Mask: முடியை ஸ்ட்ராங்கா வைக்க உதவும் எள் விதை ஹேர் மாஸ்க். எப்படி பயன்படுத்துவது?
செய்முறை
- முதலில் பாத்திரம் ஒன்றில் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி ஆளி விதைகளைத் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- இதில் தண்ணீர் பாதியாகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து சிறிது நேரம் அப்படியே விட வேண்டும்.
- அதன் பிறகு இதை வடிகட்டி ஒரு சுத்தமான பாட்டில் ஒன்றில் வைக்க வேண்டும்.
- இப்போது ஆளி விதைகளிலிருந்து இயற்கையான ஜெல் தயார் செய்யப்படுகிறது.
- அதன் பிறகு தினமும் காலையில் இந்த ஜெல்லை முடியில் அப்ளை செய்வதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.
முடிக்கு ஆளிவிதை ஜெல்லை எப்படி பயன்படுத்தலாம்?
- ஆளிவிதை ஜெல்லை தலைமுடிக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுத்தலாம்.
- அதன் படி, ஷாம்பு போட்ட பிறகு இந்த ஆளி விதை ஜெல்லைத் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம்.
- அதன் பிறகு தண்ணீரில் தலைமுடியை அலசலாம்.

இவ்வாறு வீட்டிலேயே எளிமையான முறையில் ஆளி விதை ஜெல் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். எனினும், புதிதாக எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. மேலும், வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தால் மருத்துவர் அல்லது நிபுணரிடம் கலந்தாலோசித்த பிறகு பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Hair Growth: முடி நீளமாக வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது?
Image Source: Freepik