Expert

உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை மூலிகை.! நன்னாரி வேரின் நன்மைகள் இங்கே..

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் பெற்ற நன்னாரி வேர், உடல் வெப்பத்தை தணித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமம், கூந்தல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் அற்புத நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
  • SHARE
  • FOLLOW
உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கை மூலிகை.! நன்னாரி வேரின் நன்மைகள் இங்கே..


ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பு வாய்ந்த மூலிகைகளில் ஒன்றாகக் கருதப்படும் நன்னாரி வேர், பல நூற்றாண்டுகளாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலை குளிர்வித்து, இரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் இது கோடைக்கால சிகிச்சை மூலிகை எனவும் அழைக்கப்படுகிறது.

மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் ஜெய்ப்பூர் பாபுநகர இயற்கை மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா கூறியதாவது, “நன்னாரி வேர் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு, பல முக்கிய ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. சரியான முறையில் பயன்படுத்தினால், சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்தி, கருவுறுதலை அதிகரிக்கவும், சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை வழங்கவும் உதவுகிறது” என்றார்.

artical  - 2025-09-08T223709.427

நன்னாரி வேரின் ஆரோக்கிய நன்மைகள்

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்

கோடைக்காலத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பதால் மூக்கில் இரத்தம் வருதல், தலைசுற்றல், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் நன்னாரி வேர் இயற்கையான குளிர்ச்சி தரும் மூலிகையாக செயல்படுகிறது. வாதம், பித்தம், கபம் என்ற திரிதோஷங்களை சமநிலைப்படுத்தும் திறனும் இதற்கு உண்டு.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்

நன்னாரி வேரின் இயற்கை detoxifying properties உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இதனால் உடல் நச்சு நீங்கி, சிறுநீரகங்கள் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சருமம் மற்றும் கூந்தலுக்கு நன்மை

இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, இரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதன் விளைவாக முகப்பரு, பருக்கள் குறைந்து, சருமம் இயற்கையான பளபளப்புடன் காணப்படும். அதேசமயம், கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Nayuruvi Benefits: உங்களுக்கு நீண்ட நாள் உயிர்வாழ ஆசையா? அப்போ இந்த ஒரே ஒரு கீரையை மட்டும் சாப்பிடுங்க!

கருவுறுதலை மேம்படுத்தும்

ஆண், பெண் இருவரின் கருவுறுதலையும் (fertility) மேம்படுத்தும் திறன் நன்னாரி வேருக்கு உண்டு. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதால், இயற்கையான கருவுறுதல் திறனை அதிகரிக்கிறது.

கீல்வாத வலியிலிருந்து நிவாரணம்

நன்னாரி வேரில் உள்ள anti-inflammatory மற்றும் antioxidant பண்புகள், மூட்டு வலி, வீக்கம், கீல்வாதம் போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் அளிக்கிறது. இது எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

அதில் உள்ள இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய்களைத் தடுக்கவும், உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது. அடிக்கடி நோய்களுக்கு ஆளாகும் நபர்களுக்கு நன்னாரி நல்ல தீர்வாக இருக்கும்.

உடலுக்கு சக்தியளிக்கிறது

சோர்வு, பலவீனம் போன்ற பிரச்சினைகளை நீக்கி உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. தொடர்ந்து உட்கொண்டால் உடல் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

artical  - 2025-09-08T223623.848

நன்னாரி வேரை எப்படி உட்கொள்வது?

டாக்டர் கிரண் குப்தா கூறியதாவது, “நன்னாரி வேரை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலை அதை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி, மூலிகை தேநீராக (herbal tea) அருந்தலாம். குறிப்பாக கோடை காலங்களில் இதை தொடர்ந்து உட்கொள்வது, உடலை குளிர்வித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது” என்றார்.

இறுதியாக..

நன்னாரி வேர், உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மட்டுமல்லாமல், சிறுநீரக ஆரோக்கியம், சரும அழகு, கூந்தல் வளர்ச்சி, கருவுறுதல் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கும் பெரும் பயன் தருகிறது. மேலும், கீல்வாத வலி மற்றும் சோர்வு போன்றவற்றில் இயற்கையான நிவாரணத்தை வழங்குகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், நன்னாரி வேரை உட்கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

{Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கான மாற்றாகக் கருதப்படக்கூடாது. எந்தவொரு உடல்நல பிரச்சினைக்கும் அல்லது உணவு பழக்கத்தில் மாற்றங்களுக்கும் முன் தகுதியான மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.}

Read Next

தொடர்ந்து 2 வாரம் வெந்தயம் உட்கொள்வதால் உங்க உடலுக்கு என்னாகும் தெரியுமா? மருத்துவரின் பரிந்துரை

Disclaimer