ஸ்கூல் லீவு.. என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம்னு யோசனையா.? மஷ்ரூம் வச்சி இப்படி செஞ்சி கொடுங்க..

  • SHARE
  • FOLLOW
ஸ்கூல் லீவு.. என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம்னு யோசனையா.? மஷ்ரூம் வச்சி இப்படி செஞ்சி கொடுங்க..


இதற்கு ஒரு சூப்பர் ஸ்னாக்ஸ் இருக்கும். மஷ்ரூம் இருந்தால் போதும். சூப்பரான, ஆரோக்கியமான மஷ்ரூம் ரோல் செய்து கொடுக்கலாம். இதில் பல நன்மைகள் உள்ளன. இந்த மஷ்ரூம் ரோல் எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.

மஷ்ரூம் ரோல் ரெசிபி (Mushroom Roll Recipe)

தேவையான பொருட்கள்

  • சப்பாத்தி - தேவைக்கு ஏற்ப
  • மஷ்ரூம் - 1/2 கிலோ
  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • வெங்காயம் - 1
  • பச்சை குடைமிளகாய் - 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரக தூள் - 1/2 டீஸ்பூன்
  • சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • தயிர் - 1 கப்
  • புதினா சட்னி - 2 டீஸ்பூன்
  • பச்சை குடைமிளகாய் - 1
  • மல்லி இலை - 1 கப்
  • எலுமிச்சைபழச்சாறு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தி தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், சாட் மசாலா, உப்பு, குடைமிளகாய், மல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  • இதில் மஷ்ரூம் துண்டுகளை அதில் சேர்த்து கலந்து சுமார் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • பின்னர் ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் தயிர் மஷ்ரூம் கலவையை சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.
  • இப்போது, சப்பாத்தியை எடுத்து அதன் மீது புதினா சட்னி தடவவும். இப்போது தயார் செய்து வைத்த மஷ்ரூமை வைத்து அதில் வைத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  • கடைசியாக சப்பாத்தியை, மடக்கி பரிமாறவும்.

இதையும் படிங்க: Paneer Roll: வெறும் 10 நிமிடம் போதும்… குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் ரோல் தயார்!!

காளான் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

நோய் எதிர்ப்பு சக்தி

காளானில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்-பி1, பி2, பி9, பி12, வைட்டமின்-சி, வைட்டமின்-டி2 உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை புற்றுநோயைத் தடுக்கவும், உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

காளானில் உள்ள லினோலிக் அமிலம் புற்றுநோய்க்கு எதிரான கலவையாக செயல்படுகிறது. இது மார்பக புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

மனச்சோர்வு குறையும்

காளான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மன ஆரோக்கியத்திற்கும் உதவும். காளானில் எர்கோதியோனைன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது நம் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது. காளானில் அதிக பொட்டாசியம் உள்ளது, இது பதட்டத்தை குறைக்கிறது.

அழகு மேம்படும்

காளான்கள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. காளான்களை நம் உணவில் சேர்த்துக் கொண்டால், அவை சருமச் சுருக்கங்களைத் தடுக்கவும், செல்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கவும் உதவும். காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறத்தை அதிகரிக்கும். அதனால்தான் காளான் எண்ணெய்கள் வயதான எதிர்ப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் சீரம்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. உணவில் காளானை சேர்த்துக் கொண்டால் சரும வறட்சி பிரச்சனையை குறைக்கலாம்.

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் பொரித்த உணவு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்