Healthy Snacks For School Kids: குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். அவர்கள் விதவிதமான சுவையை எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது, வாய்க்கு ருசியான ஸ்னாக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நீங்கள் செய்ய வேண்டிய ஸ்னாக்ஸ் ரெசிபி இங்கே.
கலர்புல்லான மினி இட்லி
குழந்தைகள் கண்களுக்கு கவர்ச்சியான உணவுகளை விரும்புவார்கள். இதை ஆரோக்கியமான முறையில் செய்து தரவும். அதற்கு வண்ணமான இட்லி சுட்டு கொட்க்கவும். இதற்கு இயற்கையான வண்ணங்களை உபயோகிக்கவும்.

அது எப்படி செய்யலாம் என்ற கேள்வு எழுகிறதா? அதற்கு பீர்ரூட் சாறு மற்றும் கீரை சாறு போன்றவற்றை பயன்படுத்தவும். மேலும் குடைமிளகாய், கேரட் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை மாவுடன் இணைத்து இட்லி சுட்டு கொடுக்கவும். இது பார்ப்பதற்கு வண்ணமாகவும், ஆரோக்கியமாகவும், சுவையாகவும் இருக்கும்.
இதையும் படிங்க: Healthy Food For Kids: உங்க குழந்தையோட சீரான வளர்ச்சிக்கு இந்த 5 உணவுகள் கட்டாயம்!
நட்ஸ் பட்டர்
குழந்தைகளுக்கு சாக்லேட் சுவை ரொம்ப பிடிக்கும். இதற்காக சாக்லேட் கொடுக்காதீர்கள். இதற்கு பதிலாக நட்ஸ் சேர்த்த பட்டர்களை கொடுக்கவும்.
மாலை நேரத்தில் பிரட் அல்லது பன் மீது பீனட் பட்டர், ஹேசல் நட்ஸ் பட்டர் மற்றும் பாதாம் பட்டர் போன்றவற்றை தடவி கொடுக்கவும். இது சுவையாகவும் இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புரோட்டீன் நிறைந்த ஸ்னாக்ஸ்
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கும் போது அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சுண்டல், பயிறு, நட்ஸ் பிஸ்கட் போன்றவற்றை கொடுக்கவும். இவற்றில் புரோட்டீன் நிறைந்திருக்கும். மேலும் இது குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான பான்கேக்
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் பான்கேக் செய்து கொடுக்கவும். மைதா சேர்க்காமல் செய்வது அவசியம். இதற்கு பதிலாக ஓட்ஸ், கோதுமை, தினை, ராகி போன்றவற்றை பயன்படுத்தி பான்கேக் செய்து கொடுக்கவும்.
மேலும் இதில் முட்டை, வாழைப்பழம் மற்றும் நாட்டு சர்க்கரை போன்றவற்றை இணைத்து பான்கேக் செய்து கொடுக்கவும். இது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.
ஸ்மூதிகள்
குழந்தைகள் பழம் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால், சர்க்கரை செறிவூட்டப்பட்ட பானங்களை அதிகம் விரும்புவார்கள்,
இதனை தவிர்க்க பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு ஸ்மூத்தி செய்து கொடுக்கவும். இது இயற்கை சர்க்கரை மூலத்தை கொண்டுள்ளது. ஆகையால் இது ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.
வேகவைத்த முட்டை
முட்டையில் வைட்டமின் பி12, புரதம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு குழந்தைகளுக்கு முட்டையை வேகவைத்து கொடுக்கவும்.
Image Source: Freepik