$
Healthy Snacks For Kids: முழு ஆண்டு தேர்வு முடிந்து குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. அவ்வளவு தான், இனி வீடே இரண்டாக இருக்கும். அவர்களை செய்யும் சேட்டைகளை சாமளிப்பது ரொம்ப கஷ்ட்டம்.
எந்நேரமும் விளையாட்டு, டிவி பார்ப்பது, ஃபோன் பார்ப்பது என ரகளையாக இருப்பார்கள். உங்கள் குழந்தைகள் மட்டுமல்லாமல், அவர்களது நண்பர்கள், உறவினர்களின் பிள்ளைகள் என உங்கள் வீட்டில் எக்கச்செக்க பிள்ளைகள் ஓடிஆடி விளையாடிக் கொண்டிருப்பர்.

இவர்களை சமாளிப்பது கடினம். குறிப்பாக குழந்தைகள் வீட்டில் இருக்கும்போது, சாப்பிட எதாச்சும் ஸ்பெஷலா செஞ்சு கொடுங்கனு, கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுவும் ஃபோனில் பார்க்கும் பல டிஸ்களை செய்துதருமாறு கேட்ப்பார்கள்.
குழந்தைகளை கேட்ப்பதை செய்துக்கொடுப்பது நல்லதுதான். இருந்தாலும் அரோக்கியம் மிக முக்கியம். அவர்கள் கேட்கிறார்கள் என்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்நாக்ஸ்களை செய்து தர வேண்டாம். அதற்கு மாற்றக ஆரோக்கியம் நிறைந்த பண்டங்களை செய்துத்தரவும். நாங்கள் சில ஆரோக்கியமான ரெசிபிகளை இங்கே பகிர்ந்துள்ளோம். இதனை ட்ரை பண்ணவும்.
பான்கேக்
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
முட்டை - 2
பால் - 1 1/2 கப்
தயிர் - 2 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
தேன் - தேவையான அளவு

செய்முறை
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்து எடுத்துக்கொள்ளவும்.
- இதில் கோதுமை மாவு, பால், தயிர் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
- தற்போது அடுப்பிள் தோசை கல்லை வைத்து சூடுபடுத்தவும்.
- கல்லு சிறிது சூடான உடன், கொஞ்சம் நெய் தடவவும்.
- பின்னர் கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி ஊற்றவும். ஆனால், மாவை தேய்க்க வேண்டாம்.
- இருபக்கவும் மிதமாக வேகும் வரை பிரட்டிப்போடவும்.
- அவ்வளவு தான் பான்கேக் ரெடி. விரும்பினால், இதன் மீது தேன் தடவிக் கொடுக்கவும்.
இதையும் படிங்க: Summer Snacks: சம்மரை சமாளிக்க குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்னாக்ஸ்.!
வாழைப்பழம் மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் - 1
அத்திப்பழம் - 1
அக்ரூட் பருப்பு - 2
பாதாம் பருப்பு - 4
பால் - 1 கப்

செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அத்திப்பழம், அக்ரூட் பருப்பு, பாதாம் பருப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- தற்போது மிக்ஸர் ஜாரில் வாழைப்பழைத்தை நறுக்கி சேர்க்கவும்.
- இதனுடன் பால் மற்றும் ஊற வைத்த நட்ஸ்-ஐ சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் நன்கு அரைத்து எடுக்கவும்.
- அவ்வளவு தான், வாழைப்பழம் மில்க் ஷேக் ரெடி. இதனை ஒரு கப்பில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
பணியாரம்
தேவையான பொருட்கள்
இட்லி மாவு -1 கப்
நாட்டுவெல்லம் - அரை கப்
ஏலத்தூள்- கால் டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்
முந்திரி - 5
பாதாம் - 5
நெய்- தேவையான அளவு

செய்முறை
- நன்கு புளிக்க வைத்த இட்லி மாவு
- நாட்டுவெல்லத்தை இலேசாக தண்ணீர் விட்டு பாகு எடுத்துக்கொள்ளவும்.
- தற்போது இட்லி மாவில் வெல்ல பாகை கலந்துக்கொள்ளவும்.
- வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி பாதமை வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனை பணியார மாவுடன் கலக்கவும்.
- அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து சூடுபடுத்தவும்.
- சூடானதும், மாவை ஊறி மிதமான சூட்டில் வைக்கும்.
- இருபுறவும் பொன்னிறமாக ஆகும் வரை எண்ணெய்விட்டு சுடவும்,
- அவ்வளவு தான் பணியாரம் ரெடி.