How To Eat Pumpkin Seeds And Its Benefits: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை காய்கறிகள், பழங்களைத் தவிர விதைகளும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், நாம் சில சத்தான விதைகள் கொண்ட பழங்கள், காய்கறிகளிலிருந்து விதைகளைத் தூக்கி எறிந்து விடுகிறோம். உண்மையில் விதைகளும் உடல் ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறது. விதைகளை உணவில் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பூசணி விதை உடலுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதைக் காண்போம்.
பூசணி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பூசணி விதைகளை எடுத்துக் கொள்வதற்கான முக்கிய காரணம் அதிலுள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள், மக்னீசியம், புரதம், மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பூசணி விதைகளை வழக்கமான உணவில் சேர்க்கும் முறை மற்றும் அதன் பயன்களைக் குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin During Summer: எடை குறைப்பு முதல் இதய நோய் வரை. கோடையில் பூசணி தரும் அற்புத நன்மைகள்
பூசணி விதை தரும் ஆரோக்கிய நன்மைகள்
இதய ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதிலுள்ள ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதிலுள்ள பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு
பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், ஒழுங்கற்ற குடல் இயக்கத்தில் பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் எளிதாக மலம் கழிக்க உதவுவதுடன், உடலிலிருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது.
பக்கவாதம் அபாயத்தைக் குறைக்க
பூசணி விதைகள் புரதம், கார்போஹைட்ரேட்டுகளை விட அதிக கொழுப்பை வழங்குகிறது. ஆய்வுகளின் படி, இந்த விதைகளில் உள்ள கொழுப்புகள் பாலி அன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகும். இவை உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதுடன், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!
புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க
பூசணி விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் பெருங்குடல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயை நிர்வகிக்க
பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் என்ற கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் மக்னீசியம் சத்துக்களும் உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதுடன், தசைகள் மற்றும் நரம்பு செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது.
செல்களின் சேதத்தைத் தடுக்க
பூசணி விதைகளில் ஃபினால்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் உட்பட ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. இது பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Benefits: பூசணிக்காயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
தூக்கத்தை மேம்படுத்த
இதில் டிரிப்டோபன் என்ற அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த அமிலங்கள் உடலில் செரடோனின், மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இவை இரண்டுமே நல்ல இரவு தூக்கத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் ஆகும். இது தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தினசரி உணவில் பூசணி விதைகள் எடுத்துக் கொள்வது எப்படி
இந்த விதைகளை உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
- பூசணி விதைகளின் நன்மைகளைப் பெற பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதை வேகவைத்த பொருள்கள், சாஸ்கள் போன்றவற்றிலும் இணைத்து எடுத்துக் கொள்ளலாம்.
- பூசணி விதைகளை ஃப்ரூட் சாலட், அவகேடோ டோஸ்ட், ஓட்ஸ், தயிர் போன்றவற்றில் சேர்த்து பயன்படுத்தலாம்.
- இந்த விதைகளை சூப் ரெசிபிகளில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இது புரத உட்கொள்ளலை அதிகரிக்க ஏதுவாக அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: Summer Empty Stomach Drinks: சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் வயிற்றில் ஜில்லுனு இந்த டிரிங்ஸ் குடிங்க
Image Source: Freepik