Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Expert

பெண்கள் தினமும் 1-2 தேக்கரண்டி பூசணி விதைகளை கட்டாயம் சாப்பிடணும்.. ஏன் தெரியுமா?

பெண்களுக்கு பூசணி விதைகள் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதில் பெண்கள் தினமும் 1-2 தேக்கரண்டி அளவிலான பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றைச் சேர்ப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த வரிசையில், விதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விதைகளைப் பொறுத்த வரை ஏராளமான வகைகள் உள்ளன. பூசணி விதையில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சிறிய விதைகளை உட்கொள்வது உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

இதில் பெண்கள் தினமும் 1 முதல் 2 தேக்கரண்டி பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மதுமிதா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

பெண்கள் பூசணி விதைகளைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நிபுணர் தனது பதிவில்,”சிறிய விதைகள், மகத்தான நன்மைகள்!” என்று தொடங்கி பதிவை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து, பூசணி விதைகள் பெண்களின் சூப்பர்ஃபுட் ஆகக் கருதப்படுகிறது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது முதல் மனநிலை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிப்பது வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

பல்வேறு நன்மைகளைப் பெற தினமும் 1-2 டீஸ்பூன் பூசணி விதைகள் சேர்த்து முயற்சிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிட்டால் என்ன ஆகும்.? நன்மைகள் இங்கே..

மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகள்

  • பூசணி விதைகள் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பெண்களுக்கு என்னென்ன நன்மைகளை வழங்கும் என்பது குறித்து காணலாம்.
  • மெக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் பிடிப்புகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற PMS அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
  • இது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகிறது.
  • இது இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பூசணி விதைகள் ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆதாரங்களாகும். எனவே தான் இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இது கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்கவும், நல்ல கொழுப்பை (HDL) மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயம் ஏற்படுவதைக் குறைக்கலாம். இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஹார்மோன் சமநிலையை ஆதரிக்க

பூசணி விதைகளில் துத்தநாகம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் தினமும் 1-2 டீஸ்பூன் பூசணி விதைகளைச் சாப்பிடுவது புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் சமநிலையை ஆதரிக்க உதவுகிறது. மேலும் இது PCOS அறிகுறிகளைக் குறைக்கவும், மாதவிடாய் அசௌகரியங்களை எளிதாக்கவும் உதவுகிறது.

இரும்புச்சத்து அளவை அதிகரிக்க

பூசணி விதைகள் இரும்புச்சத்துக்கள் நிறைந்த விதைகள் ஆகும். இவை இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படக்கூடிய இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த

பூசணி விதைகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த விதைகளாகும். இவை PCOS, எண்டோமெட்ரியோசிஸ் போன்ற நிலைகளுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இது செல் வயதானதிலிருந்து பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: பாக்கத்தான் சிறுசு.. பண்ற வேல பெருசு.. உடலை காக்கும் பூசணி விதைகள்.. மருத்துவர் கூறும் 7 நன்மைகள்.!

சிறந்த தூக்கம் மற்றும் மனநிலையை ஊக்குவிக்க

நிபுணரின் கூற்றுப்படி, இந்த சிறிய விதைகள் டிரிப்டோபனின் நல்ல மூலமாகும். இது சிறந்த மனநிலை மற்றும் நிம்மதியான தூக்கத்திற்கு உதவக்கூடிய செரோடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.

View this post on Instagram

A post shared by Madhumetha Vijayasankar MSc | Nutritionist (@dietitian_madhumetha)

எலும்புகளை வலுப்படுத்த

பூசணி விதைகள் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் நிறைந்த கலவையாகும். இந்தக் கலவையானது எலும்பு தாது அடர்த்தியை ஆதரிக்கிறது. குறிப்பாக 40 வயதுக்குப் பிறகு, பெண்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சிறுநீர்ப்பை ஆரோக்கியத்திற்கு

பூசணி விதைகளை உட்கொள்வது அதிகப்படியான சிறுநீர்ப்பை அறிகுறிகளைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: முழு ஆரோக்கியத்தையும் கட்டிக்காக்கும் விதைகள் இங்கே.. மருத்துவர் பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

மார்பகங்களை உறுதியாக்க ஐஸ் மசாஜ் உதவுமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 14, 2025 13:39 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content