Doctor Verified

பாக்கத்தான் சிறுசு.. பண்ற வேல பெருசு.. உடலை காக்கும் பூசணி விதைகள்.. மருத்துவர் கூறும் 7 நன்மைகள்.!

பூசணி விதைகள் (Pumpkin Seeds) சிறியதாகத் தோன்றினாலும், உடல்நலம் காக்கும் சக்திவாய்ந்த சத்துகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி முதல் எலும்பு வலிமை வரை பூசணி விதை தரும் நன்மைகளை மருத்துவர் விளக்கியுள்ளார். 
  • SHARE
  • FOLLOW
பாக்கத்தான் சிறுசு.. பண்ற வேல பெருசு.. உடலை காக்கும் பூசணி விதைகள்.. மருத்துவர் கூறும் 7 நன்மைகள்.!


நாம் பூசணிக்காய் சாப்பிட்டு, அதன் விதைகளை குப்பையில் போடுகிறோம். ஆனால் அந்தச் சிறிய பூசணி விதைகளில் இருக்கும் சத்துகள், நம்மை நோய்களிலிருந்து காக்கும் வல்லமை கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

சமீபத்தில் காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் பால் பகிர்ந்த வீடியோவில், பூசணி விதைகள் தரும் 7 முக்கிய நன்மைகள் பற்றி விரிவாகக் கூறியிருந்தார். அவர் கூறியதை அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

Video Link: >

பூசணி விதையின் நன்மைகள்

1. நோய் எதிர்ப்பு சக்தி

பூசணி விதைகளில் ஜிங்க் (Zinc) நிறைந்துள்ளது. இது உடலின் immune system-ஐ வலுப்படுத்தி, சளி, காய்ச்சல், தொற்று போன்றவற்றை எதிர்கொள்ள உதவுகிறது.

2. இதய ஆரோக்கியம்

பூசணி விதையில், இதயத்தின் துடிப்பைச் சீராகவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிலும் வைக்கும் மேக்னீஷியம் (Magnesium) அதிகம் உள்ளது. இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

3. மன அமைதி

பூசணி விதைகளில் உள்ள ட்ரிப்டோபேன் (Tryptophan), உடலில் serotonin hormone-ஆக மாறி மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மன அழுத்தம், கவலை போன்றவற்றை குறைக்கும் இயற்கை வழி இது.

artical  - 2025-09-01T225352.159

4. எலும்பு வலிமை

மேக்னீஷியம், பாஸ்பரஸ் (Phosphorus) போன்ற தாதுக்கள், எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: சமையலில் எந்த எண்ணெய் உங்களுக்கு நல்லது தெரியுமா? நிபுணர் சொல்வதை தெரிஞ்சுக்கோங்க!

5. சர்க்கரை கட்டுப்பாடு

இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் மேக்னீஷியம், இரத்தச் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள உணவாக கருதப்படுகிறது.

6. எடை குறைப்பு & பசி கட்டுப்பாடு

பூசணி விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதச்சத்துக்கள், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருகிறது. தேவையில்லாமல் சாப்பிடுவதை தடுக்கவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

7. கண் மற்றும் தோல் ஆரோக்கியம்

பூசணி விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின் E, தோலில் ஏற்படும் முதுமை அடையாளங்களை தாமதப்படுத்தி, கண் பார்வையை பாதுகாக்கும். அன்றாட வாழ்க்கையில் வரும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

 இறுதியாக..

சிறியதாகத் தோன்றும் பூசணி விதைகள், நம் இதயம், எலும்பு, தோல், மனநலம், இரத்தச் சர்க்கரை என உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கினால், உடல்நலத்தில் பெரிய மாற்றத்தை காணலாம் என டாக்டர் பால் கூறுகிறார்.

Disclaimer: இந்த பதிவு, பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. எந்தவொரு உணவு முறையையோ சிகிச்சையையோ பின்பற்றும் முன், உங்கள் உடல்நிலைக்கேற்ற மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

 

Read Next

குடல் ஆரோக்கியத்திற்கு இந்த 9 உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கோங்க.. மருத்துவர் சொன்னது

Disclaimer

குறிச்சொற்கள்